ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

உலக மேப்பில் உட்கார்ந்து துப்பறியும் விஷால்.. வித்தியாசமாக வெளிவந்த துப்பறிவாளன் 2 போஸ்டர்

விஷால், பிரசன்னா மற்றும் பலர் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் துப்பறிவாளன். இயக்குனர் மிஷ்கின் இயக்கிய இத்திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதைத் தொடர்ந்து இப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க மிஷ்கின் முடிவு எடுத்தார்.

அதன்படி துப்பறிவாளன் 2 விஷால் மற்றும் பிரசன்னா நடிப்பில் தொடங்கியது. படம் பாதி முடிவடைந்த நிலையில் விஷால் மற்றும் இயக்குனருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் அப்படத்தை விட்டு பாதியில் வெளியேறினார்.

அதன் பிறகு நடிகர் விஷால் இப் படத்தை இயக்குவதாக அறிவித்தார். பின்னர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் விஷால் உலக வரைபடத்தில் அமர்ந்து கொண்டு எதையோ தேடுவது போல உள்ளது.

ஏற்கனவே துப்பறிவாளன் முதல் பாகத்தில் விஷால் டிடெக்டிவாக அருமையாக நடித்திருந்தார். அதில் அவரது நடிப்பு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். தற்போது வெளியாகி உள்ள அதன் இரண்டாம் பாகமான துப்பறிவாளன் 2 படத்தின் போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

விஷால் படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் தயாரித்தும் வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து வரும் நிலையில் படம் அடுத்த வருடம் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இப்படத்தில் நாசர், ஜெயபிரகாஷ், கௌதமி, ரகுமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதன் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

thupparivalan2
thupparivalan2

Trending News