ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய படம் இதுதான்.. சந்திரமுகி எல்லாம் அப்புறம்தான்

ரஜினிகாந்த் நடிப்பில் வாசு இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி. இப்படம் வெளிவந்தபோது எந்த படங்களும் படைக்காத ஒரு சாதனை படைத்ததாக பலரும் கூறினர். அதாவது அதிக நாட்கள் ஓடிய படம் என்ற சாதனையை படைத்தது.

இந்த படத்திற்கு பிறகு எந்த படமும் பெரிய அளவில் திரையரங்குகளில் ஓடியதில்லை. பல வருடங்களுக்கு முன்பு சந்திரமுகி வெளியாகினாலும் இன்றுவரை இப்படத்தின் சாதனையை பலரும் பேசிதான் வருகின்றனர்.

அப்படி ரசிகர் ஒருவர் சினிமாவிலேயே அதிக நாட்கள் ஓடிய படம் சந்திரமுகி தான் எனக் கூறி வந்தார். ஆனால் தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான ஹரிதாஸ் திரைப்படம் சந்திரமுகி படத்திற்கு முன்பே வெளியாகி ஒரு வருடத்திற்கு மேலாகியும் திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டது. இதனை வைத்து பார்க்கும் போது சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய படங்களில் ஹரிதாஸ் படம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது. இப்படத்திற்கு பிறகு தான் பல படங்களும் சாதனை படைத்ததாக பலரும் கூறி வருகின்றனர்.

haridas
haridas

இப்போது வேண்டுமானால் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். ஆனால் அப்போது எம்ஜிஆர் முன்னரே தியாகராஜ பாகவதரை யாராலும் அசைக்க முடியாத அளவிற்கு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமும், தனது படங்களுக்கு தனி வரவேற்பும் வைத்திருந்தார். ஒரு காலத்தில் தியாகராஜ பாகவதரை பார்ப்பதற்காகவே கோடான கோடி ரசிகர்கள் பகல், இரவு என காத்திருந்த காலங்கள் உண்டு.

அந்தளவிற்கு தனக்கென தனி ரசிகர்களை வைத்திருந்தார். அப்போதெல்லாம் தியாகராஜ பாகவதர் படம் வெளியானால் மற்ற நடிகர்கள் படங்களை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் பலரும் தயக்கம் காட்டுவார்கள். ஏனென்றால் எப்படியும் இவர் படம்தான் வெற்றி பெறும் என்பது அவர்களது எண்ணம். இதனாலேயே பல தயாரிப்பாளர்களும் தியாகராஜ பாகவதர் திரைப்படம் வெளியான பிறகுதான் தங்களது படங்களை வெளியிடுவார்கள்.

- Advertisement -spot_img

Trending News