திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பாவனியை தோற்கடித்து தொங்கவிட்ட ராஜு.. செல்லத்த ஒரு வழி ஆக்கிடியே!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த டாஸ்க்கில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் இறுதிச்சுற்றில் நேரடியாக போட்டியிட தகுதியுடையோராவார்கள்.

இந்நிலையில் திங்கட்கிழமை அன்று இந்த டாஸ்க்கிலிருந்து நிரூப் வெளியேற்றப்பட்டார். இதனைத்தொடர்ந்து நேற்று நடந்த டாஸ்க்கில் கொடுக்கப்படும் பத்து முட்டைகளை யார் பத்திரமாக வைத்திருக்கிறார்களோ, அவர்கள் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில்  தொடர்வார்கள் என்று பிக்பாஸ் அறிவித்தார்.

அதன் பிறகு ராஜு, பாவனியின் முட்டையை உடைக்க முடிவெடுத்து அவருடைய மூட்டையை உடைத்துவிட்டார். ஆனால் அப்போது இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கடுமையாக நடந்து கொண்டனர். இதேபோன்று அமீர், பிரியங்காவுடன் கூட்டு சேர்ந்து தாமரையின் முட்டையை உடைத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த தாமரை நேற்றைய நிகழ்ச்சியில் பிரியங்காவிடம் கோபத்தில் கத்தியதுடன் கைகலப்பிலும் ஈடுபட்டார். இவ்வாறு இதுவரை நிரூப், தாமரை, பாவனி ஆகிய 3 பேர் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நேற்றைய நிகழ்ச்சியை பார்த்தபின் ரசிகர்களுக்கு, ராஜு மற்றும் அமீர் இருவரும் பெண்களுடன் விளையாடாமல் வீட்டில் இருக்கும் மற்ற ஆண்கள் அதாவது சிபி, சஞ்சீவ் உடன் விளையாடி தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்க வேண்டும் என எதிர்பார்த்தனர்.

ஆனால் அவ்வாறு நடந்து கொள்ளாமல் ஆண்கள் பெண்களிடமே தங்களுடைய  வலிமையை காட்டுவது முறையல்ல என பிக்பாஸ் ரசிகர்கள் சிலர் சோஷியல் மீடியாவில் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Trending News