ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மீண்டும் டைகர் முத்துவேல் பாண்டியன் ஆட்டம் ஆரம்பம்.. உண்மையை உளறிய ரஜினி மருமகள்

Actor Rajini: எந்த ஒரு வேலையும் பிடித்து செய்தால் அதற்கு வயது தடையே இல்லை என்பதற்கு தகுந்த உதாரணமாக ரஜினி அவருடைய 73 வது வயதிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தூள் கிளப்புகிறார். இப்போது லைக்கா தயாரிப்பில், ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு ரஜினி உடன் இணைந்து பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்துடன் பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர்களும் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் இப்படத்தின் படப்பிடிப்பு மிக மும்மரமாக போய்க் கொண்டிருக்கிறது.

இதனை முடித்துவிட்டு லோகேஷ் இயக்கத்தில் ரஜினி அவருடைய 171 வது படத்தை கமிட் பண்ணி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ரஜினி அவருடைய அடுத்த படத்திற்கான தகவலும் தற்போது வெளியாயிருக்கிறது. அதாவது கடந்த வருடம் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் மரண ஹிட் கொடுத்து வசூல் அளவில் 600 கோடிக்கும் மேல் லாபத்தை கொடுத்தது.

Also read: இன்று வரை அடிச்சுக்க முடியாத 5 சட்ட நாடக படங்கள்.. பாரிஸ்டர் ரஜினிகாந்த் ஆக வெளுத்து வாங்கிய சிவாஜி

இதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி சந்தோஷத்தில் ரஜினி, அனிருத் மற்றும் நெல்சனுக்கு பரிசாக காரை வழங்கினார். ஏனென்றால் அந்த அளவிற்கு ஜெயிலர் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் கூடிய விரைவில் ஜெயிலர் 2 படம் உருவாகப் போவதாக இப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்ணா கூறி இருக்கிறார். சமீபத்தில் இவர் “Birth mark” என்ற படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டார். அப்பொழுது அங்கு பேசிய இவரிடம் பத்திரிகையாளர் ஜெயிலர் 2 படத்திற்கான கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். அதில் அவர் கூறியது ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிப்பதாகவும் அதை கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளிவிடுவார்கள் என்றும் அனைவரது முன்னிலையிலும் உளறி விட்டார்.

அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கூடிய விரைவில் இதற்கான தகவல்கள் வெளிவரும். அத்துடன் இரண்டாம் பாகத்தில் ரஜினியின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் மாஸாகவும், ஜெயிலில் மோகன் லால் மற்றும் சிவ ராஜ்குமார் கதையும் வெளிக்கொண்டு வரப் போகிறார்கள்.

Also read: பிளான் பண்ணாம களத்தில் இறங்கி தோற்றுப் போன ரஜினி படம்.. வெற்றி இயக்குனரையே சாய்த்த நடிகையின் ராசி

Trending News