சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

2வது பொண்டாட்டி வந்த நேரம்.. விஷ்ணு விஷால் லயன் அப்பில் இத்தனை படங்களா?

விஷ்ணு விஷாலுக்கு தற்போது கூரையை பிச்சுகிட்டு அதிர்ஷ்டம் கொட்டுகிறது. இதற்கெல்லாம் காரணம் விஷ்ணு விஷாலின் இரண்டாவது பொண்டாட்டி வந்த நேரம் தான் என்று கூறுகிறார்கள். அதுவும் ஒரு வகையில் உண்மைதான். விஷ்ணு விஷாலின் மனைவிக்கு சினிமா வட்டாரத்தில் நிறைய பிரபலங்களுடன் நட்பு உள்ளதாம்.

ஆகையால் அவர்களிடம் சிபாரிசு செய்து தனது கணவருக்கு வாய்ப்பை வாங்கி கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடம் பேசி லால் சலாம் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் கிரிக்கெட் வீரராக நடிக்கவிருக்கிறார்.

Also Read : உயிரை காப்பாற்ற கெஞ்சிய மனைவி.. இறந்த பிறகு தற்பெருமை பேசி விளம்பரம் தேடும் விஷ்ணு விஷால்

இந்நிலையில் சமீபத்தில் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை விஷ்ணு விஷால் தயாரித்து உள்ள நிலையில் வசூலும் பட்டையை கிளப்பி வருகிறது. இப்போது விஷ்ணு விஷால் கைவசம் 9 படங்கள் உள்ளதாம்.

லால் சலாம், வீரதீர சூரன், ஆரியன், மோகன்தாஸ், ஜெகதால கில்லாடி போன்ற படங்கள் இதில் அடங்கும். ஆகையால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே விஷ்ணு விஷாலின் படங்கள் வரிசையாக வெளியாகும் என எதிர்பார்க்கலாம். சமீபகலாமாக விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சரியாக போகவில்லை.

Also Read : 2ம் மனைவியின் கண்ட்ரோலில் இருக்கும் விஷ்ணு விஷால்.. ட்வீட் போட்டு அம்பலப்படுத்திய விஜய் ஆண்டனி

சொந்த வாழ்க்கையிலும் ஏகப்பட்ட பிரச்சனை போய்க்கொண்டிருந்தது. ஆனால் தற்போது சினிமா மற்றும் சொந்த வாழ்க்கை இரண்டிலுமே விஷ்ணு விஷாலுக்கு அதிர்ஷ்டம் கொட்டுகிறது. மேலும் இதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் விஷ்ணு விஷால் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார்.

விஷ்ணு விஷால் நடிக்கும் பெரும்பான்மையான படங்களை அவரே தயாரிக்கிறார். ஆகையால் அதிலும் நல்ல லாபத்தை பார்த்து வருகிறார். இப்போது விஷ்ணு விஷால் தொட்டதெல்லாம் பொன்னாக மாறுகிறது. இதற்கெல்லாம் அவரது இரண்டாவது மனைவியும் உறுதுணையாக இருக்கிறார்.

Also Read : விஜய் சேதுபதியை ஓரங்ட்டி ஜெயித்த விஷ்ணு விஷால்.. குஸ்தி முதல் நாள் வசூலை பார்த்து வாயைப் பிளந்த டிஎஸ்பி

Trending News