Tiruchu Surya: தொடர் தோல்விகளால் தமிழக பாஜக கட்சிக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டு இருப்பது ஓரளவுக்கு உறுதியான ஒன்றுதான். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றிபெறவில்லை. இதற்கு முந்தைய ஓட்டு கணிப்புகளின் படி இந்த முறை பாஜக அரசு வாங்கிய ஓட்டு எண்ணிக்கை ரொம்பவே குறைவு.
அண்ணாமலை தன்னை முழு வீட்டில் வேலை செய்யும் தலைவராக காட்டிக் கொண்டாலும் கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. அவர்களால் நினைத்த மாதிரி ஒரு நட்சத்திர வேட்பாளரை கூட தங்களுடைய கட்சிக்குள் இழுக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
தேர்தல் ரிசல்ட் வெளிவந்த கையோடு தமிழிசை மொத்த தோல்விக்கும் அண்ணாமலை தான் காரணம் என்பது போல் பேசியிருந்தார். இதனால் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்ற மேடையிலேயே அமித்ஷா தமிழிசையை கடிந்து கொண்டதும், அதன் பின்னர் அண்ணாமலை மற்றும் தமிழிசை நேரில் சந்தித்த சம்பவமும் எல்லோருக்கும் தெரியும்.
அதன் பின்னர் பாஜக மைய குழு மீட்டிங் நடைபெற்றது. இந்த மீட்டிங் முடிந்த கையோடு பாஜகவின் முக்கிய உறுப்பினரான திருச்சி சூர்யா கட்சித் தலைமை அலுவலக நிர்வாகிகளால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் திருச்சி சூர்யா பகிரங்கமாக தன்னுடைய twitter பக்கத்தில் பாஜக கட்சி பற்றி குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார்.
உட்கட்சி பூசலை புட்டு புட்டு வைத்த திருச்சி சூர்யா
அந்த பதிவில் மையக் குழு கூட்டத்தில் கட்சி தலைமையை விமர்சித்து பேசியதற்காக என்னை நீக்கி இருக்கிறீர்கள். அப்படி என்றால் அண்ணாமலையை பற்றி விமர்சித்ததற்காக தமிழிசையை ஏன் நீக்கவில்லை. அவர் சார்ந்திருக்கும் சாதி அமைப்புதான் அதற்கு காரணமா என்று கேட்டிருக்கிறார்.
தமிழிசையை நீக்கவில்லை என்றால் அப்போது அவர் சொன்ன கருத்து உண்மை என்று வைத்துக் கொள்வோம் அப்படி இருந்தால் அண்ணாமலையை ஏன் கட்சியை விட்டு நீக்கவில்லை. அவர் சார்ந்த சாதிய ஓட்டுகளும் உங்களுக்கு தேவைப்படுகிறதா.
பாஜக தோல்வி அடைந்ததற்கு பட்டாசு வெடித்து கொண்டாடி இருக்கின்றனர் திமுகவினர். அந்த திமுக தலைவர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய எஸ் வி சேகரை ஏன் நீங்கள் கட்சியில் இருந்து விளக்கவில்லை.
இதற்கு அவருடைய சாதிதான் காரணமா. இந்துக்கள் எல்லாம் பொதுவானவர்கள் என்ற கருத்தை சொல்லிவிட்டு சாதிய கட்சியை நடக்கிறதா என்று பல குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார் திருச்சி சூர்யா.