திருப்பதிக்கு சென்றால் திருப்பம் வருமோ இல்லையோ, வாங்கிய லட்டு ஒரு வாரத்திற்கு வரும். பல பேர் விரும்பி பிரசாதமாக வாங்கி சாப்பிடும் லட்டுவில் கூட கலப்படம் செய்திருக்கிறது ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி. மலிவான நெய், உண்மையில் நெய்யே இல்லை என்று சொல்லி, தற்போது சந்திரபாபு ஆட்சி பகீர் கிளப்பியுள்ளது.
ஆம். திருப்பதி சென்றாலே, “லட்டு எங்கே” என்று தான் அனைவரும் கேட்பார்கள். இப்படி அனைவரையும் கவர்ந்த திருப்பதி லட்டு தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சை அனைவரையும் பதற வைத்துள்ளது. கடவுளுக்கு பிரசாதமாக படைக்கபடும், லட்டுவில், விலங்குகளின் கொழுப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக மீன் எண்ணெய், மாட்டு கொழுப்பு, பண்ணி கொழுப்பு போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் கர்நாடக பால் கூட்டமைப்பு, “எங்களிடமிருந்து கடந்த 4 வருடங்களாக நெய் வாங்கவே இல்லை” என்றும் தெரிவித்துள்ளனர். நந்தினி என்று ஒரு நெய் தான் கடந்த 4 வருடங்களாக திருப்பதி தேவஸ்தானம் வாங்கி பயன்படுத்தியுள்ளது. அந்த நெய்யில் தான், இத்தனை கலப்படங்கள் உள்ளன.
இதை தொடர்ந்து, மக்களும் பக்தர்களும் அதிர்ந்து போயுள்ளனர். இது தங்களுடைய மத உணர்வுகளை புண்படுத்தும் படி உள்ளது என்றும், காட்டமாக மக்கள் பேசி வருகின்றனர். மேலும் YSR கட்சி பிரமுகர்கள், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், சந்திரபாபு நாயுடுவின் இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்தது. மேலும், “சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்ய தயங்க மாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த நானும், எனது குடும்பத்தினரும் கடவுளின் சாட்சியாக சத்தியம் செய்ய தயாராக உள்ளோம்.” என்று தெரிவித்தது குறிப்பிடதக்கது.