வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

எஸ் கே 24 ஹீரோயினும், டைட்டிலும் ரெடி ஆயிடுச்சு.. சிவா ட்ரீம் நடிகையை தூக்கி வந்த தூது புறா

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் தெள்ளத் தெளிவாக செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே இமான் மேட்டரில் அவர் பெயர் டேமேஜ் ஆனது. இப்பொழுது அந்த அவப்பெயர்களை போக்கும் விதமாக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். படத்தின் கதை தேர்விலும் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்.

அமரன் படத்தை முடித்துவிட்டார். அடுத்தபடியாக ஏ ஆர் முருகதாஸ் படத்தை முடித்த பின் சிவகார்த்திகேயனின் நண்பரான டான் படம் இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு அடுத்த படத்தை ஒப்படைத்து இருக்கிறார். இப்பொழுது அந்த படத்திற்கு டைட்டிலையும், ஹீரோயினையும் ரெடி பண்ணிவிட்டனர்.

ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ஆஸ்தான நடிகை பிரியங்கா மோகன் தான் இந்த படத்தில் கமிட் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சமீப காலமாக சிவகார்த்திகேயன், ஒரு ஹீரோயின் மீது மிகவும் க்ரஸ்ஸில் இருந்து வருகிறார். அந்த ஹீரோயினுக்கு பல பேர் மூலம் தூது விட்டிருக்கிறார். இப்பொழுது எஸ் கே 24 படத்திற்குஅந்த ஹீரோயினையும் வளைத்து விட்டார்.

சிவா கனவு நடிகையை வளைத்த தூது புறா

சமீபகாலமாக சிவகார்த்திகேயன் ராஷ்மிகா மந்தனா மீது மிகவும் கிரஷில் இருப்பதாகவும். அவரின் அடுத்தடுத்த படங்களுக்கு பல பேர் மூலம் ராஷ்மிகா மந்தனாவிற்கு தூது விட்டும் வந்துள்ளார். இப்பொழுது பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பார்ட்னர் சுதன் சிவகார்த்திகேயனின் ஆசையை நிறைவேற்றி உள்ளார்

ராஷ்மிகா மந்தனாவின் மேனேஜரும் இதேசுதன் தான் அதனால் அவரது கால் சீட்டுகளை எல்லாம் பிளாக் செய்து எஸ்.கே. 24 படத்திற்கு எளிதாக ரஸ்மிகாவை கமிட் செய்து விட்டார். இந்த படத்திற்கு “டான்” போல் “பாஸ்” என்ற இரண்டெழுத்து பெயரை வைத்துள்ளனர்.

Trending News