புதன்கிழமை, ஜனவரி 8, 2025

சிஏஏ போராட்டம், கொரோனா காலத்தில் ஊரடங்கு மீறிய வழக்கு.. 10 லட்சம் வழக்குகளை ரத்து செய்த தமிழக முதல்வர்!

வரும் சட்ட பேரவைத் தேர்தலுக்காக சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தமிழக முதல்வர், கொரோனா காலத்தில் ஊரடங்கை மீறியதால் பொதுமக்களின் மீது போடப்பட்ட வழக்குகளும், சிஏஏ போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை கடையநல்லூரில் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது வெளியிட்டுள்ளார்.

அதேபோல் கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் சட்டதிட்டங்களின் படி ரத்து செய்ய சிபாரிசு செய்யப்படும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

edappadi-1
edappadi-1

ஆனால் காவல்துறையை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்குகளுக்கு மட்டும் ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக முதல்வர் தெரிவித்துள்ளார். ஆக மொத்தம் சுமார் 10 லட்சம் வழக்குகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் ரத்து செய்துள்ளதாக தனது அறிவிப்பில் வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பானது மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Trending News