வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய தமிழக முதல்வர்.. குவியும் பாராட்டுக்கள்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே அரசு பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தும்படி கடந்த ஆண்டு மே மாதத்தில்  அரசு ஆணை வெளியிடப்பட்டது. ஆகையால் அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 59 வயது என்பது அமலில் உள்ள போது,

அதனை 60 வயதாக உயர்த்தப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தற்போது சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள்,

உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், சங்கங்கள், ஆணையங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பணி புரியும் அனைத்து பணியாளர்களுக்கும் இது பொருந்தும்.

ஆகையால் இந்த ஆண்டு 31.05.2021 அன்று பணியிலிருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும், அரசுப் பணியில் இருக்கும் அனைவருக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்பதை தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அரசு ஊழியர்களும், பலதரப்பட்டவர்களும் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending News