தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் சட்டப்பேரவையில் இன்று சுய உதவி குழுக்களுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். என்னவெனில் சுய உதவி குழுக்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்களை தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ஏழை எளிய மக்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற நகை கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பையும் அறிவித்துள்ளார்.
அதாவது ஏழை எளிய மக்கள் கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் வரை நகைகளை அடகு வைத்தால், அந்த கடன் தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பை இன்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.
எனவே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கிராம பெண்கள், சுயசார்பு குடும்பத்தை வழிநடத்தவும், பொருளாதார ரீதியாக வெற்றி நடைபோடவும் பெரும் துணையாக இருப்பது மகளிர் சுய உதவிக்குழுக்கள் தான்.
ஆகையால் இக்குழுக்கள் மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் பெற்று சிறு தொழில்கள் மூலம் வாழ்வில் முன்னேற தமிழக அரசு ஏற்கனவே பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றது.
அதற்கெல்லாம் பக்கபலமாக தற்போது மகளிர் சுய உதவிக்குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்ததற்கும், ஏழை எளிய மக்களின் நகை கடனை தள்ளுபடி செய்ததற்கும் பாமர மக்கள் தங்களது நன்றி கலந்த பாராட்டுக்கள் தமிழக அரசிற்கு தெரிவித்து வருகின்றனர்.