புதன்கிழமை, ஜனவரி 15, 2025

4000 கோடி.. ஊ ஊ.. கோபாலபுரம் தவிர ஒட்டுமொத்த சென்னையும் சாக்கடையில் மிதக்குது..

கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளுத்து வாங்கிய மழையால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அங்கங்கே தண்ணீர் தேங்கி நின்றும், மின்சார வசதி இல்லாமலும், போட் வசதி கூட இல்லமால் மக்கள் வேதனையடைந்தனர். இதை தொடர்ந்து, அடுத்த வருடத்திற்கான தற்காப்பு என்று கூறி ஆளும் அரசு 4000 கோடி ப்ராஜெக்ட் ஒன்றை கொண்டு வந்தது..

அடுத்த வருடம் இப்படி தண்ணீர் தேங்கி நிற்காது என்று கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமின்றி, புயல் அறிவிப்பு வந்த உடனே, பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை என்று தான் கூறியாக வேண்டும்.

4000 கோடி.. ஊ ஊ..

தற்போது Fengal புயலால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த வருடம் ஒரு இடத்திலும் தண்ணீர் தேங்காது என்று கூறினார். ஆனால் கடந்த வருடத்தை போலவே, சாக்கடை ஆறு பெருக்கெடுத்து ஓடியது. மழை சற்று குறைவாக பெய்த்தால் ஒரு சில இடங்களில் பெரிய பாதிப்பு இல்லை.

இருப்பினும், புரசைவாக்கம், சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மாம்பழம் போன்ற பகுதிகள் தண்ணீர் காடாக தான் உள்ளது. மேலும் மோட்டார் வாகனம் வைத்து தண்ணீர் வெளியேற்றும் இடங்களில் பெரிய மாற்றம் இல்லை.. இதை கண்ட மக்கள் கடுப்பில் காரசாரமாக தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

4000 கோடி-க்கு என்ன பண்ணீங்க? இந்த மழையையே தாக்கு பிடிக்க முடியவில்லை.. மொத்தத்துல, 4000 கோடி ஊ..ஊ தான்.. என்று கூற ஆரம்பித்தனர். இதற்க்கு முதலமைச்சர்.. எவ்வளவு நேரத்தில் புயல் கடக்கும் என்பதை கணிக்க முடியுமே தவிர, உறுதியாக கூறமுடியவில்லை.

அதனால் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும், இப்படி தண்ணீர் தேங்கியது என்று கூறினார். இதை தொடர்ந்து நெட்டிசன்கள், “டிசம்பர் மாதம் இப்படி தான் இருக்கும் என்று இந்த மஹாப்ரபுவுக்கு தெரியாதா?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trending News