கிரிக்கெட் என்றாலே நம் அனைவருக்குமே ஒரு அலாதி சந்தோஷம் தான். ஒவ்வொருவருக்கும் ஒரு பிடித்தமான கிரிக்கெட் வீரர் இருப்பார். அதில் சுரேஷ் ரெய்னாவை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம். சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார்.
அவ்வபோது பந்துவீச்சிலும் ஈடுபடுவார் புற சுழல் பந்து போடுவதில் சிறந்தவர். சவுரவ் கங்குலி, யுவராஜ்சிங், கௌதம் காம்பீர், ஷிகர் தவான் போன்றவர்கள் இந்திய அணியில் உருவான இடது கை ஆட்டக்காரர்கள்.
அவர்கள் இதில் சுரேஷ் ரெய்னாவும் ஒருவராவார். 2006ஆம் ஆண்டு இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ரெய்னா இருப்பினும் 2010ஆம் ஆண்டில் நடந்த தேர்வு போட்டியிலேயே அவர் முதன்முதலாக பங்கு பெற்று சிறப்பாக விளையாடினார்.
டோனி இல்லாத மூன்று போட்டிகளில் CSK அணியின் தலைவராக இருந்தார். 2011-ல் ஐபிஎல் போட்டியில் 438 ரன்கள் குவித்து அதிக ஓட்டங்கள் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்தவர் ரெய்னா.
தற்போது நடைபெற்று வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளர் உடன் லைவாக உரையாடிய ரெய்னா தென்னிந்திய கலாச்சாரத்தை பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் கூறிய ரெய்னா தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது “நானும் பிராமணன் தான்” அந்த கலாச்சாரத்தை மிகவும் நேசிக்கிறேன் என்று கூறியிருந்தார். லைவாக ஜாதியை பற்றி கூறியது வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.