திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இன்று 9.30 மணிக்கு அதிரடி ஆட்டத்துடன் களமிறங்கும் நான்கு மருமகள்கள்.. ஜனனிக்கு முழு ஆதரவாக இருக்கும் சக்தி

Ethirneechal 2 Serial: இப்ப வந்துரும் அப்ப வந்துரும்னு எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த தருணம் இன்று முதல் ஆரம்பமாகப் போகிறது. அதாவது ஒரு சீரியலுக்கு இந்த அளவுக்கு வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருக்கிறது என்றால் அதற்கு எதிர்நீச்சல் என்ற ஒரு நாடகத்தின் கதை அல்ல, நிஜம் என்று சொல்வது போல முக்கால்வாசி பெண்கள் படும் கஷ்டத்தை மையமாக கொண்டிருப்பதால் தான்.

நல்ல படித்து சொந்தக் காலில் சம்பாதித்து தனக்கு வேண்டியதையும், தன் குடும்பத்திற்கும் சேர்த்து சம்பாதித்து காட்டும் ஒரு கெத்தான வாழ்க்கை தான் வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுவார்கள். ஆனால் அது ஆண்களுக்கு மட்டுமே நிஜமாகிக் கொண்டிருக்கிறது. பெண்கள் என்னதான் படித்து பட்டதாரி ஆகி இருந்தாலும் கல்யாணத்துக்கு பிறகு பாத்திரம் கழுவி அடுப்பாங்கரை வேலைகளை பார்த்து கணவர்களையும் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ளும் விஷயத்தில் பொறுப்பாகி விடுகிறார்கள்.

அதன் பிறகு அவர்களுடைய கனவு வெறும் கனவாகவே போய்விடுகிறது. ஆனால் இதையெல்லாம் மாற்றும் சக்தி நம் கையில் இருக்கிறது என்பதற்கு ஏற்ப எதிர்நீச்சலின் கதை கல்யாணம் ஆகி காலங்கள் போயிருந்தாலும் நாம் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக குணசேகரன் வீட்டில் மாட்டிக் கொண்டு முழிக்கும் நான்கு பெண்களின் காவிய கதையாக தான் எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் வரப்போகிறது.

அந்த வகையில் குணசேகரன் வீட்டில் முடங்கிக் கிடந்த பெண்களுக்கு தைரியம் தன்னம்பிக்கையும் கொடுத்து அவர்களை வழிநடத்தும் ஒரு கதாநாயகியாக தான் ஜனனி செயல்பட்டு வருகிறார். இதனால் குணசேகரன் வீட்டு பெண்கள் பொருத்தது போதும் இனி நமக்கான வாழ்க்கை வாழலாம் என்று சொந்த காலில் பறக்க துணிந்து விட்டார்கள்.

ஆனால் இதே மாதிரி வெளியில் எத்தனையோ பெண்கள் அவர்களுடைய கனவை நிறைவேற்ற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதை தெரிந்து கொண்டு அவர்களையும் இலட்சியத்திற்காக போராடி சொந்தக்காலில் நிற்கவைக்க வேண்டும் என்று ஜனனி குறிக்கோளாக வைத்துக்கொண்டார். இந்த நிலையில் ஜனனிக்கு முழு ஆதரவையும் கொடுத்து சப்போர்ட் செய்யப்போவது சக்தியாகத்தான் இருக்கப்போகிறார்.

மேலும் என்னதான் கதிர் மற்றும் ஞானம் திருந்திய மாதிரி காட்டினாலும் கடைசி நேரத்தில் நாய் வாலை நிமிட்ட முடியாது என்பதற்கு ஏற்ப மறுபடியும் குணசேகரன் பின்னாடி அவர்கள் அலைய ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் இப்பொழுது ஆரம்பமாகும் எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் ரேணுகா மற்றும் நந்தினிக்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக கதிர் மற்றும் ஞானம், அண்ணன் பேச்சை கேட்டுக் கொண்டு ஆட்டி படைக்கப் போகிறார்.

இருந்தாலும் அந்த தடைகளை எல்லாம் தாண்டி கனவை நிறைவேற்ற இன்று முதல் 9.30மணிக்கு வாரத்தின் ஏழு நாட்களும் அவர்களுடைய பயணத்தை தொடங்கப் போகிறார்கள்.

Trending News