ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அடிச்சு வாய ஒடச்சிடுவேன், போடா லூசு.. 5வது நாளே கலவர பூமியாக மாறிய பிக் பாஸ் வீடு

ஐந்தாவது நாளே இந்த கொலவெறியா என பிக் பாஸ் ரசிகர்கள் வாயடைத்துப் போய் உட்காரும் வகையில் தற்போது அதிரடியான ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது.

அதுவும் இப்போது வந்திருக்கும் ப்ரோமோவில் கேப்டனான விஜய் வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்சை அழைத்து தர லோக்கலாக இறங்கிப் பேசுகிறார். பிரதீப் தன்னுடைய ஷூவை இடித்துவிட்டு போனாரு. திடீர்னு எனக்கு கோபம் வந்துவிடும். கோபத்தில் மூக்கு வாயெல்லாம் அடிச்சு ஒடச்சிடுவேன்.

Also Read: யோக்கியன் மாதிரி கவினை அடிச்சீங்க பிரதீப், இந்த லிப்லாக் சீன் எடுக்க 8 டேக்கா.? காட்டுத் தீயாய் வைரலாகும் புகைப்படம்

இங்க மட்டுமல்ல வெளியிலும் என்மீது பாசமாக இருக்கும் பசங்க நிறைய பேர் இருக்காங்க. வெளியே போனாலும் உங்களை சும்மா விடமாட்டாங்க என்று பிரதீப்பை விஜய் ரவுடி போல் மிரட்டுகிறார். இதைக் கேட்டதும் பவா செல்லதுரை, ‘விஜய் இப்படி பேசுவது சரிதான் என்று யாராவது ஒருத்தர் சொல்லுங்க’ என்று கேப்டனின் அகம்பாவத்தை சுட்டிக்காட்டுகிறார்.

உடனே விஷ்ணு ஆவேசப்பட்டு, விஜய் முன்பு நெஞ்ச நிமித்திக்கிட்டு சண்டைக்கு போறாரு. நான் இப்போ உன்னை செருப்பால தட்டினா நீ என்ன பண்ணுவ, முடிஞ்சா என்னை அடிச்சு பாரு! என்று கேட்கிறார். உடனே விஜய் முதல்ல நீ என்ன செருப்பால தட்டி பாரு என்று இருவரும் மல்லுக்கு நிற்கின்றனர்.

Also Read: பிக் பாஸ் மேடையை அசிங்கப்படுத்திய போட்டியாளர்.. கவினை அடிச்ச அளவுக்கு உனக்கு அறிவு பத்தல தம்பி

திடீரென்று பிரதீப் எழுந்து நான் எல்லாரையும் அடிக்க போறேன் என்று லூசு மாதிரி பேசுறாரு. இப்படி பிக் பாஸ் வீடே கலவர பூமியாக மாறியதால் மாயா இடையில் குறுக்கிட்டு இருவரையும் சமாதானப்படுத்த பார்க்கிறார். உடனே பிரதீப் எதற்காக என்னை பார்த்து பேசுகிறாய் என்று கேட்க உடனே மாயா, ‘போயா யோவ்’ என கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.

இப்படி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் கை நீட்டும் அளவுக்கு வந்துவிட்டனர். இது பற்றி நாளை நிகழ்ச்சிகள் கமல் வெளுத்து வாங்க போகிறார். அதிலும் விஜய், பிரதீப் இருவரின் போக்கு சுத்தமாகவே சரியில்லை. இவர்கள் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

அதிரடியாக வெளியான பிக் பாஸ் ப்ரோமோ இதோ!

Also Read: 4வது நாளே போட்டியாளர்களை வச்சு பிதுக்கும் பிக் பாஸ் 7.. மேக்கப் இல்லன்னா இவங்க மூஞ்ச பார்க்கவே முடியாதே குருநாதா

Trending News