புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முதல் முறையாக திமிரு பேச்சுக்கு ஸ்ட்ரைக் அடித்து விட்ட பிக் பாஸ் 7.. இந்த பொழப்புக்கு வெளியே தூக்கி இருக்கணும்

Bigg Boss Promo: எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட சூடு பிடிக்கும். அதிலும் இன்று சரவெடியாக இருக்கப் போகிறது. நிகழ்ச்சியில் கமல் தரமான  சம்பவத்தை செய்து இருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 7ன் முதல் கேப்டனான விஜய் பிரதீப்பை வன்முறையான பேச்சால் கண்டித்தார். இது சுத்தமாகவே யாருக்கும் பிடிக்கல. இதை கவனித்த கமல் இன்றைய நிகழ்ச்சியில் விஜய் சொன்னதை அப்படியே சொல்லிக்காட்டி இதெல்லாம் என்ன பேச்சு என்று தப்பை சுட்டி காட்டினார் .

Also Read: விசித்ரா, ஜோவிகா யார் பக்கம் நியாயம்.. அனல் பறக்கும் ஆண்டவரின் தீர்ப்பு

உடனே விஜய் அப்படியெல்லாம் சொல்லல சார் என்று மறுக்க, குறும்படம் போட்டு காட்டிடுவேன் என்று வாயடைத்தார்.  பின்பு கமல் அவருடைய திமிருத்தனமான பேச்சுக்கு கண்டனம் என்று ஸ்ட்ரைக் (strike) கார்டை தூக்கி காண்பித்தார்.

இதேபோன்று மீண்டும் நிகழ்ந்து இந்தக் கார்டை ஒருவர் மூன்று முறை பெற்று விட்டால் அதிரடியாக அந்த போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்பதை  கமல் இன்றைய நிகழ்ச்சியில் காட்டமாக தெரிவித்தார். அதற்கான ப்ரோமோ வெளியாகி ட்ரெண்ட் ஆகிறது.

Also Read: பிக் பாஸ் 7ல் இந்த வாரம் வெளியேறப் போகும் முதல் நபர்.. ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி ட்விஸ்ட்

அதன் தொடர்ச்சியாக வெளிவந்த ப்ரோமோவில் விஜய் மட்டுமல்ல இன்னும் வீட்டில் இரண்டு பேருக்கு ஸ்ட்ரைக் கார்டு கொடுக்க வேண்டும் என்று மாயா பரிந்துரைத்தார். அவர் கூல் சுரேஷ் மற்றும் விசித்ரா இருவரையும் மனதில் வைத்து தான் சொல்கிறார்.

உடனே கமல் எதற்காக விஜய்க்கு மட்டும்  கொடுத்திருக்கிறேன் என்பதையும் விளக்கினார். விஜய் ஒருவரின் சோகத்தை கிண்டலடித்தும் பேசினார். அது என்ன என்பதை நான் சொல்ல மாட்டேன்.  கூட இருந்து பேசி சிரித்தவர்களுக்கு அது தெரியும் என்று விஜய்யின் முகத்திரையை கிழித்து கேப்டனை கதி கலங்க வைத்தார். தொடர்ச்சியாக வெளிவந்த இந்த ரெண்டு ப்ரோமோ மூலம்  இன்றைய எபிசோட் ரணகளமாக இருக்க போகிறது.

 ரணகளமாக வெளியான பிக் பாஸ் ப்ரோமோ!

Also Read: பிக்பாஸில் முதல் ஆளாக வெளியேற போவது அனன்யா இல்லையாம்.. கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்து அனுப்பிய கமல்

Trending News