விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு மிகவும் கடுமையான டாஸ்க் தரப்படுகிறது.
இதில் பல போட்டிகளுக்கு பிறகு நாமினேஷனில் ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அக்ஷரா, பிரியங்கா, ராஜு, பவானி, வருண் மற்றும் அபிநய் ஆகியோர் நாமினேஷன் லிஸ்ட்டில் சிக்கினார்கள். இவர்களில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்று பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்தனர்.
தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருமே கடுமையான போட்டியாளர்கள். அப்படி பார்க்கும்போது அபிநய் மட்டும் தான் தன்னுடைய விளையாட்டில் முழுமையான பங்களிப்பை தர தவறிவிட்டார். அவர் இவ்வளவு நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தாக்கு பிடித்தது மிகவும் ஆச்சரியம் தான்.
மேலும் அவர் பவானியுடன் நெருக்கமாக பழகியதும் ஒரு காரணம். அவரால்தான் பவானியின் இமேஜ் டேமேஜ் ஆனதாக பவானியின் ரசிகர்கள் கருதுகின்றனர். அதன் காரணமாக பிக்பாஸ் ரசிகர்கள் அபிநய் பிக்பாஸை விட்டு வெளியேற வேண்டும் என்ற கருத்து கூறி வந்தனர்.
இந்நிலையில் நாமினேஷனில் சிக்கியிருக்கும் நபர்களில் பிரியங்கா, ராஜு, வருண் இந்த மூவரில் ஒருவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதில் வருணுக்கு அதிக வாய்ப்பிருக்கிறது. மேலும் இந்த வார எவிக்சன் யாரும் எதிர்பாராத ஒன்றாக இருக்க போகிறது. கமல்ஹாசன் வரும் நாளான இன்று நாமினேஷனில் இருந்து யார் காப்பாற்றப்படுகிறார்கள் என்று அறிவிப்பார்.
மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேற்றப்படுகிறார் என்ற காட்சி நாளை விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும். இந்த வார வெளியேற்றத்திற்கு பிறகு வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் கடுமையான போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. அனைவரும் மக்களின் ஆதரவுடன் இருப்பதால் இனி வரும் வாரங்களில் யார் வெளியேற்றப்படுவார் என்பது மிகவும் சுவாரசியமாக காட்டப்பட இருக்கிறது.