தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த பல நடிகர்கள் சினிமாவின் ஆரம்ப காலத்தில் ஒரு சில படங்களில் தலையை மட்டும் காட்டிவிட்டு நடித்து சென்றுள்ளனர். அந்த வரிசையில் கவுண்டமணி உட்பட மிர்ச்சி சிவா வரை இடம்பிடித்துள்ளனர்.
கவுண்டமணி: தமிழ் சினிமாவில் காமெடியனாக பல படங்கள் நடித்த கவுண்டமணி சினிமாவின் ஆரம்ப காலத்தில் சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் டிரைவராக ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்துள்ளார்.
எஸ் ஜே சூர்யா: அஜித் மற்றும் விஜய்யை வைத்து இயக்கிய எஸ் ஜே சூர்யா சினிமாவில் ஆரம்ப காலத்தில் ஆசை மற்றும் கிழக்கு சீமையிலே படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் கிழக்குச் சீமையிலே படத்தில் அடியாளாக ஒரு சில காட்சிகள் மட்டும் நடித்துள்ளார்.
சூரி: வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமடைந்த சூரி ஆரம்ப காலத்தில் பல நடிகர்களின் படங்களில் ஒரு காட்சியில் மட்டும் நடித்துள்ளார். அதாவது அஜித் நடிப்பில் வெளியான ஜி மற்றும் ரெட் படத்திலும், சகுணம் படத்திலும், சுந்தர் சி இயக்கிய கண்ணன் வருவான், வடிவேலுவுடன் வின்னர், ஜெயம்ரவியுடன் தீபாவளி, விக்ரமுடன் பீமா ஆகிய படங்களில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்துள்ளார்.
மிர்ச்சி சிவா: தமிழ் படம் மூலம் அகில உலக சூப்பர் ஸ்டார் என பெயர் பெற்ற மிர்ச்சி சிவா நடிப்பின் ஆரம்ப காலத்தில் 12 B படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்துள்ளார்.
சினிமாவின் ஆரம்பகாலத்தில் ஒரு காட்சியில் மட்டும் பல நடிகர்கள் நடித்துள்ளனர் அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி போன்ற பல நடிகர்களும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.