Vidaamuyarchi review: லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி இன்று வந்துள்ளது. நீண்ட இழுவைக்கு பிறகு ரிலீஸ் ஆகியுள்ள படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை உள்ளிட்ட அனைத்து தியேட்டர்களிலும் ஒரே ஆரவாரம் தான். மேலும் படத்தை பார்த்த ரசிகர்களும் சினிமா விமர்சகர்களும் தங்களுடைய கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.
அதில் அஜித் ரசிகர்கள் படத்தை ஆகா ஓகோ என கொண்டாடி வருகின்றனர். சண்டை காட்சியிலிருந்து அவருடைய பெர்ஃபார்மன்ஸ் ஒவ்வொன்றும் தெறிக்க விட்டுள்ளது.
அதே சமயம் படத்தின் காட்சிகள் பல இடங்களில் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது. ஆனால் சில இடங்களில் சலிப்பு தட்டுவதை தவிர்க்க முடியவில்லை.
ஆக்சன் திரில்லராக இருக்கும் இப்படத்தில் பின்னணி இசை வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. அதேபோல் ரொம்பவும் ஸ்டைலாக படம் வந்திருக்கிறது என ரசிகர்கள் கூறுகின்றனர்.
மேலும் பிளாஷ்பேக் போர்ஷன் குறைவாக இருந்தாலும் அஜித் திரிஷாவின் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது என ஆடியன்ஸ் கூறுகின்றனர். சில ரசிகர்கள் இது விடாமுயற்சி இல்ல வீண் முயற்சி என பதிவிட்டு வருகின்றனர்.
இப்படியாக படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் போகப்போக ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து அடுத்த வசூல் நிலவரம் தெரியும்.