NEEK Movie Review: பவிஷ், அனிகா, பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், சரண்யா பொன்வண்ணன், சரத்குமார் ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கிறது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.
தனுஷ் இயக்கி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடல்கள் ட்ரெய்லர் அனைவரையும் கவர்ந்த நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பதை விமர்சனத்தின் மூலம் காண்போம்.
கல்லூரியில் படிக்கும் போது ஹீரோ அனிகாவை காதலிக்கிறார். ஆனால் அது பிரேக்கப்பில் முடிகிறது. அதன் பிறகு காதல் தோல்வியில் பல பெண்களுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார் ஹீரோ.
ஒரு கால் கட்டு போட்டால் சரியாகிவிடும் என அவருக்கு திருமண ஏற்பாடு செய்கின்றனர். பெண் பார்க்க போனால் அங்கு பள்ளியில் படித்த பிரியா வாரியர் இருக்கிறார்.
NEEK எப்படி இருக்கு.? முழு விமர்சனம்
இருவரும் பேசி பழகி பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கின்றனர். இதற்கு இடையில் அனிகாவுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது? ஹீரோ காதலியை கரம் பிடித்தாரா? அல்லது ப்ரியா வாரியரை திருமணம் செய்தாரா? என்பதுதான் படத்தின் கதை.
சாதாரணமான கதை தான் என்பதை தனுஷ் ட்ரைலரிலேயே சொல்லிவிட்டார். அப்படித்தான் படமும் இருக்கிறது பெரிய எதிர்பார்ப்போடு செல்ல வேண்டாம்.
ஜாலியான படம் என்பதால் தனுஷ் கதையை மேலோட்டமாக கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் ஜிவி பிரகாஷின் இசை பாடல்கள் வெறித்தனமாக இருக்கிறது.
ஆனால் ஹீரோ நடிப்பில் இன்னும் பயிற்சி பெற வேண்டும். அந்தக் குறையை போக்கும் வகையில் மேத்யூ தாமஸ் வரும் காட்சிகள் அனைத்துமே என்டர்டெயின்மென்ட் தான்.
மேலும் இறுதியில் அடுத்த படத்திற்கான அழைப்பையும் விடுத்துள்ளார் தனுஷ். இப்படி படத்தில் ஒரு சில பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் பல குறைகள் இருக்கிறது. ஆக எதிர்பார்ப்புகள் இல்லாமல் படத்தை ஒருமுறை பார்க்கலாம்.
சினிமாபேட்டை ரேட்டிங்: 2.75/5