சனிக்கிழமை, அக்டோபர் 19, 2024

அபி கேரக்டரை கையில் எடுக்கப் போகும் தொல்காப்பியன்.. சன் டிவி மாறனுடன் ஜீவானந்தம் நச்சுன்னு போட்ட ஒப்பந்தம்

Sun Tv Maran and Thiruselvam: இயக்குனர் திருச்செல்வம் ஆரம்பத்தில் மெட்டிஒலி நாடகத்தின் மூலம் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நுழைந்தார். அதன் பின் கொஞ்ச எபிசோடுகளிலே எங்கே போனார் என்று தேடும்படியாக காணாமல் போய்விட்டார். அந்த சமயத்தில் இவருக்கும் இயக்குனர் திருமுருகனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் நடிக்க மறுத்து விட்டதாக பல செய்திகள் வெளியானது.

அதன் பின் மெட்டி ஒலி நாடகம் தொடங்கிய அடுத்த வருடத்தில் திருச்செல்வம் இயக்குனராக கோலங்கள் நாடகத்தின் மூலம் தொல்காப்பியனாக நுழைந்தார். இதில் இவருடைய கதையும் நடிப்பும் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக கவர்ந்து பெஸ்ட் சீரியல் என்று விருது கொடுக்கும் அளவிற்கு கோலங்கள் நாடகம் பெயர் வாங்கியது. அதனால் தான் கிட்டத்தட்ட 5 வருடத்திற்கு மேல் கோலங்கள் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது.

வெற்றி நாடகத்தை கையில் எடுக்கும் ஜீவானந்தம்

அத்துடன் பல விருதுகளையும் வாங்கி குவித்தது. அந்த அளவிற்கு கோலங்கள் நாடகத்தின் மூலம் திருச்செல்வம் மிகப்பெரிய உயரத்திற்கு போய்விட்டார். அதன் பிறகு கலைஞர் டிவி, ஜெயா டிவி சேனலில் கிட்டத்தட்ட ஐந்து நாடகத்தை எடுத்தார். ஆனால் அது சாதாரணமான ஒரு சீரியலாக ஒளிபரப்பாகி வந்தது. பிறகு பல வருடங்களுக்குப் பின் எதிர்நீச்சல் மூலமாக கடந்த 2022 ஆம் ஆண்டு சன் டிவியில் மீண்டும் நுழைந்தார்.

ஆரம்பமே அமர்க்களம் என்று சொல்லும் அளவிற்கு எதிர்நீச்சல் சீரியல் பட்டி தொட்டி எல்லாம் பறந்தது. ஆனால் அதற்கும் ஒரு பிரச்சனை என்று சொல்வதற்கேற்ப நாடகம் டிஆர்பி ரேட்டிங்கில் பின்னடைவை சந்தித்ததால் அவசர அவசரமாக முடிவுக்கு கொண்டு வந்து நாடகத்தை முடித்து விட்டார்கள். ஆனாலும் இப்பொழுது வரை எதிர்நீச்சல் சீரியல் பார்ப்பதற்கு கண் தேடுகிறது என்று மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இதைப் புரிந்து கொண்ட சன் டிவி கலாநிதி மாறன் சேனல் தரப்பில் இருந்து திருச்செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதாவது வெற்றி நாடகமான கோலங்கள் நாடகத்தின் இரண்டாம் பகுதியை நீங்கள் உருவாக்குங்கள். அதை வெற்றிகரமாக நாம் நடத்தலாம் என்று கேட்டிருக்கிறார்கள். அதன்படி அபி மற்றும் தொல்காப்பியன் கேரக்டரை மறுபடியும் பார்க்கும் விதமாக அப்டேட்டுகள் வெளிவர இருக்கிறது.

ஆனால் ஜீவானந்தம் போட்ட கண்டிஷன் என்னவென்றால் நாடகம் எடுக்கும் போது எந்தவித தலையிடும் இருக்கக்கூடாது. அத்துடன் முடிக்கும் நேரத்தை நானே முடிவுக்கு கொண்டு வருவேன் என்று சில ஒப்பந்தங்களை போட்டு அது ஓகே என்றால் தொடர்ந்து நாம் பேசலாம் என்று ஜீவானந்தம் என்கிற திருச்செல்வம் சொல்லி இருக்கிறார். அதனால் கூடிய விரைவில் இந்த ஒரு விஷயம் நடக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News