சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மாஸ்டர் படத்தில் தளபதியை விட விஜய் சேதுபதி தான் கெத்து.. புகழ்ந்து தள்ளிய பிரபலம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, சஞ்சீவ், கௌரி கிருஷ்ணன் ஆகியோரது நடிப்பில் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்த படம் தான் ‘மாஸ்டர்’. இந்தப் படம் தியேட்டர்களுக்கு புத்துயிர் அளித்ததால் தியேட்டர் ஓனர்கள் மாஸ்டர் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், OTT தளமான அமேசான் பிரைமில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இருந்தாலும், தியேட்டர்களில் படத்தை காண வரும் கூட்டம் இன்று வரை குறையாமல் உள்ளதாம்.

அதேபோல் மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி நடித்த பவானி ரோலுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது மட்டுமில்லாமல், பல பிரபலங்கள் விஜய்சேதுபதிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த அளவுக்கு வெறித்தனமாக பவானி ரோலில் நடித்திருந்தார் விஜய்சேதுபதி.

இந்தநிலையில் மாஸ்டர் படத்தைப் பார்த்துவிட்டு விஜய் சேதுபதியை தெலுங்கு மெகா ஸ்டார் படவிழா ஒன்றில் புகழ்ந்து தள்ளி இருக்கிறாராம்.

அதாவது தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து இருப்பவர் தான் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர் ‘உப்பனா’ எனும் தெலுங்கு படத்தின் அறிமுக விழாவில் விஜய் சேதுபதியை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

மேலும் அந்த விழாவில் சிரஞ்சீவி, ‘ஹீரோவாக நடிப்பதை விட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் கைதேர்ந்தவர் விஜய் சேதுபதி என்றும், தான் பார்த்த மாஸ்டர் படத்தில் நாயகனை விட பவானி கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், விஜய்சேதுபதிக்கு ஜார்ஜியா மற்றும் வெளிநாடுகளில் அதிக ரசிகர்கள் உள்ளனர் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், உப்பனா படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்ட போதே படம் வெற்றி பெற்றது போல் உணர்ந்தாராம் சிரஞ்சீவி.

எனவே, விஜய் சேதுபதியை பற்றி மெகாஸ்டார் இவ்வாறு புகழ்ந்து தள்ளி இருக்கும் தகவல்கள் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருவதோடு, விஜய்சேதுபதியின் ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

Trending News