வியாழக்கிழமை, அக்டோபர் 17, 2024

சொர்க்கம் மாதிரி ஊரை விட்டு சொந்த நாடு திரும்பிய டாம் குரூஸ்.. 5 ஆண்டிற்குப் பின் ஏன் இந்த முடிவு?

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாவுட் நடிகர் டாம் குரூஸ் இத்தனை ஆண்டுகள் தன் சொந்த நாட்டிற்குச் செல்ல முடியாமால் பிரபல நாட்டிலேயே தங்கியிருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் அறிந்த சூப்பர் ஸ்டாருக்கே இந்த நிலைமையா? எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ்

ஹாலிவுட்டில் 1981 ஆம் ஆண்டு எண்ட்லஸ் லைஃப் என்ற படத்தின் மூலம் டாம் குரூஸ் நடிகராக அறிமுகமானார். அதன்பின், துணை வேடங்களில் நடித்து பிரபலமான அவர் டேப்ஸ், அவுட்சைடர்ஸ் , ரிஸ்கி பிசினஸ் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து நட்சத்திர நடிகராக உருவானார்.

டாம் குரூஸ் படங்கள் தொடர்ச்சியாக ஹிட் அடிக்க, அப்படங்கள் பல மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியாகை ஜாக்கிசான் மாதிரி அவரும் பிரபலமானர். பொதுவாக ஹாலிவுட் நடிகர்கள் திறமையானவர்களாக கருதப்பட்டாலும், டாம் குரூஸ் இன்னும் ஒரு படி மேலே போய் தன் ரிஸ்ட் எடுக்கும் ரோல்களில் நடித்து சாகசங்கள் நிகழ்த்திக் காட்டி ரசிகர்களை தன் ஒவ்வொரு படத்திலும் சீட்டின் நுனியில் அமர வைத்தார்.

இதுவரை 40க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள டாம் குரூஸ், சினிமா கலைஞர்களின் கனவாக இருக்கும் ஆஸ்கர் விருதை 3 முறை வென்றிருக்கிறார். 3 கோல்டன் குளோப் விருதுகளை வென்றிருக்கிறார். தன் படங்கள் மூலம் 3 பில்லியன் கணக்கில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்து அசத்தியுள்ளார். இதில், அவரது 20 க்கும் மேற்பட்ட படங்கள் உலகம் முழுவதும் சுமார் 200 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்துள்ளன.

எல்லா காலத்திலும் மிக அதிக மதிப்புள்ள சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக டாம் குரூஸ் கருதப்படும் நிலையில் தற்போது ஹாலிவுட் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். குறிப்பாக மிசன் இம்பாசிபில் முதல் தொடர் 1996 ல் இருந்து சமீபத்தில் வெளியான டெட் ரெக்கனிங் படம் வரையில் அவர் சாகச நடிகராகவும், அதிக வசூல் குவித்த நடிகராகவும் ஹாலிவுட்டில் கருதப்படுகிறார். மிசன் இம்பாசிபில் -டெட் ரெகனிங் பார்ட் -2 வது பாகம் வரும் அடுத்தாண்டு வெளியாகவுள்ளது. இப்பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டு டாம் குரூஸ் நடித்து வருகிறார்.

பிரித்தானியாவை விட்டு சொந்த நாடு செல்லும் டாம் குரூஸ்

சமீபத்தில் பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்று டாம் குரூஸ் ஸ்டண்ட் நிகழ்த்தினார். மிக உயரத்தில் இருந்து குதித்த அவர் இதற்காக அதிகம் பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மிசன் இம்பாசிபில் படத்தின் டெட் ரெக்கானிங் பார்ட் 2 என்ற படத்துடன் சேர்த்து பல படங்கள் எடுக்கப்பட்ட நிலையில், அப்படத்தில் ஹீரோவாக நடித்த டாம் குரூஸ் ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் தங்கி விட்டார்.

அங்கு வாழ்வது பிடித்துப் போன டாம் குரூஸ் தற்போது ஷூட்டிங் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், படக்குழுவினர் பிரியாவிடை கொடுக்க, பாட்டர்சீ என்ற இடத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அமெரிக்க புறப்படும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. எதற்கு இந்த திடீர் பயணம் என ரசிகர்கள் பதறியடித்து கொண்டு தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், சமீயத்தில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் புயல் ஏற்பட்டது.

அங்கு டாம் குரூஸுக்குச் சொந்தமான பெரிய வீடும் சேதமடைந்ததாக கூறப்படும் நிலையில், இதுபற்றி டாம் குரூஸ் கவலைப்பட்டதாகவும் தகவல் வெளியானது. எனவே இவ்வீட்டை புனரமைக்கும் பணியை அவர் நேரில் சென்று பார்வையிடுவதற்கும், அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபடுவதற்காகவும் அவர் அமெரிக்கா சென்றுள்ளார் என தகவல் வெளியாகிறது. எனவே டாம் குரூஸின் அடுத்த படம் பற்றிய அறிவுப்புக்காக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

- Advertisement -spot_img

Trending News