இப்போதைய சூழலில் கோலிவுட் சினிமாவே ஒரு பணம் பிரட்டும் சந்தையாகி போனது. ஆயிரம் ஐநூறுக்கு நடித்த காலம் கடந்து இப்போது நடிகர்களின் ஊதியமோ சில கோடிகளில் துவங்கி பல கோடிகள் வரை செல்கிறது. அப்படியாக நமக்கு தெரிந்த நடிகர்களின் சொத்து மதிப்பு பற்றி பார்ப்போம்.
விஜய் சேதுபதி: மக்கள் செல்வன் என அழைக்கப்படும் விஜய் சேதுபதி ஆரம்ப காலத்தில் பல்வேறு புதுமுக இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என ஊதியம் பற்றி கவலைப்படாமல் நடித்து வந்தாலும் இப்போதைய நிலைக்கு சற்றே வெகுவான தொகையை ஊதியமாக பெறுகிறார் இப்போது மக்கள் செல்வனின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 100கோடிகளாம்.
பிரபாஸ்: தமிழ் தெலுங்கு கன்னட திரையுலகில் பெரும் அடையளத்தோடு இருப்பவர் பிரபாஸ் இவரை பிரபாஸ் என்பதை விட பாகுபலி னாறால் அனைவருக்கும் பரிட்சயம். இவரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 100கோடிகளுக்கு மேல்.
விக்ரம்: ஆக்டிங் கில்லர் சியான் விக்ரம் தமிழில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக வாழ்க்கையை துவங்கி இப்போது மாஸ் ஹீரோவாக வலம் வருபவர்
சேது படத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் கிடு கிடு உயர்வை சந்தித்தது. இவரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 150 கோடிகளுக்கு மேல்.
பிரகாஷ் ராஜ்: தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்கும பிரகாஷ்ராஜ். இவர் வில்லனாக எல்லோருக்கும் அறிமுகமானவர் இவரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 200கோடிகளை தொடும்.
சூர்யா: தென்னகத்தின் சிங்கம் சூர்யா சிவக்குமார் ஆக்ஷன் படங்களிலும் ஆக்ரோசமான டயலாக் டெலிவரிகளிலும் இவருக்கு நிகர் இவர் மட்டுமே இவரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 202கோடிகள்.
தனுஷ்: நடிகர் தனுஷ் பாடகர் தனுஷ் பாடலாசிரயர் தனுஷ் டைரக்டர் தனுஷ் தயாரிப்பாளர் தனுஷ் என பன்முகத்தன்மை கொண்டவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும் இயக்குனர் செல்வராகவனின் தம்பி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் என எத்தனையோ அடுக்கினாலும் தனுஷ் என்கிற ஒற்றை பெயரில் தமிழ் சினிமாவை உலக சினிமாவாக்கி கொண்டாட வைத்தவர். இவரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 225கோடிகள்.
ரஜினிகாந்த்: அன்றும் சரி என்றும் சரி சூப்பர் ஸ்டார் என்கிற பெயருக்கு பொறுத்தமானவர் ஸ்டைல் கிங் தலைவர் என்றெல்லாம் எல்லோராலும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் தலைவரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 350கோடிகளாம்.
அஜித்: தல தல என்று ரசிகர்களாவ் கொண்டாடப்படும் நடிகர் அஜித். ரியல் ஸ்டண்ட் ரேசிங் ஏரோ மாடலிங் என பல்வேறு துறைகளில் உண்மையான தலையாக வலம் வருபவர். இவரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 385கோடிகளாம்.
விஜய்: அன்பின் அதிபதி இளைஞர்களின் வெகுமதி திலையுலகின் தளபதி என்றெல்லாம் பலரால் கொண்டாடப்படும் விஜயின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 387 கோடிகள்.
கமல்ஹாசன்: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் ஆர்.கே.எஃப்.ஐ தயாரிப்பாளர் இயக்குனர் பாடகர் பாடலாசிரியர் நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் உலக நாயகன் கமலஹாசன். இவரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 730 கோடிகளாம்.