கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் வெளியான மாஸ்டர் படம் விஜய்யின் உண்மையான மார்க்கெட் நிலவரத்தை மற்ற நடிகர்களுக்கும் இந்திய சினிமாவுக்கும் உணர்த்தியுள்ளது.
பலரும் இந்த காலகட்டங்களில் தியேட்டரில் படத்தை வெளியிடத் தயங்கிய நிலையில் விஜய் படத்தை வெளியிட்டவுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால் சர்வசாதாரணமாக மாஸ்டர் திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும் தமிழ்நாட்டில் இதுவரை அதிக வசூல் செய்த படங்களில் மூன்று வருடங்களாக முன்னணியில் இருந்த பாகுபலி 2 படத்தின் வசூலை பிகில் படம் முறியடித்தது. ஆனால் பாகுபலி படம் கொடுத்த பங்குத் தொகை சாதனையை முறியடிக்க முடியவில்லை.
ஆனால் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பாகுபலி 2 படத்தின் பங்குத் தொகையை முறியடித்து. தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது, இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் ஷேர் வந்த 10 படங்களின் லிஸ்ட் இதோ!
- முதலிடம் மாஸ்டர் – 85.5 கோடி.
- இரண்டாவது இடம் பிகில் – 83 கோடி.
- மூன்றாவது இடம் பாகுபலி – 78 கோடி.
- நான்காவது இடம் சர்கார் – 76 கோடி.
- ஐந்தாவது இடம் மெர்சல் – 72.5 கோடி.
- ஆறாவது இடம் விஸ்வாசம் – 69.6 கோடி.
- ஏழாவது இடம் எந்திரன் – 63 கோடி.
- எட்டாவது இடம் 2.0 – 53 கோடி.
- ஒன்பதாவது இடம் பேட்ட – 55 கோடி.
- பத்தாவது இடம் தெறி – 51 கோடி.
எனவே சமீபத்திய திரைப்படங்களில் அதிக ஷேர்களை மாஸ்டர் தட்டி தூக்கி உள்ளது என்ற தகவலை அறிந்த தளபதி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.