Top 10 Hero’s Asset: பொதுவாக சினிமாவில் ஹீரோயின்களை விட ஹீரோக்கள் தான் அதிகமாக சம்பளம் வாங்கிக் கொண்டு கோடி கணக்கில் சொத்துக்களை குவித்து வைத்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் இஷ்டப்பட்ட படி ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் முன்பெல்லாம் அதிகப்படியான சம்பளமே 10 கோடி 20 கோடி தான் இருந்தது. தற்போது காலம் மாற மாற சம்பளமும் அதிகரிக்கிறது என்று சொல்வதற்கு ஏற்ப பல மடங்கு கோடி சம்பளம் அதிகரித்து விட்டது.
அதிலும் எங்களுக்கு இந்த சம்பளம் தான் வேண்டும் என்று டிமான்ட் பண்ணும் அளவிற்கு ஹீரோக்கள் வளர்ந்து விட்டார்கள். வேறு வழி இல்லாமல் தயாரிப்பாளர்களும் ஹீரோக்கள் கேட்கிற சம்பளத்தை வாரி இறைக்கிறார்கள். அப்படி பல நூறு கோடி சொத்துக்களை குவித்து வைத்திருக்கும் டாப் 10 ஹீரோக்களை பற்றி பார்க்கலாம்.
50 வருடமாக நடித்தும் கமலின் சொத்து இவ்வளவுதானா?
கமல்ஹாசன்: ஹீரோவாக சினிமாவில் கிட்டத்தட்ட 50 வருடமாக பயணித்து வரும் கமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்று வருகிறார். அந்த வகையில் இவருடைய சம்பளம் குறைந்தபட்சம் ஒரு படத்தில் 150 கோடி வரை வாங்கி வருகிறார். மொத்தமாக இவரிடம் இருக்கும் சொத்து மதிப்பு 600 கோடி வரை இருக்கும் இவர் பத்தாவது இடத்தில் இருக்கிறார்.
அஜித்: ஒரு படத்திற்காக குறைந்தபட்சம் 100 கோடி முதல் 150 கோடி வரை சம்பளத்தை பெறுகிறார். மொத்தமாக இவரிடம் 750 கோடி சொத்து மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.
பிரபாஸ்: இவர் நடிக்கக்கூடிய படங்கள் அனைத்தும் பல கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தும் வகையாக தான் இருக்கிறது. இவருடைய சம்பளம் 150 கோடி முதல் 200 கோடி வரை. அந்த வகையில் மொத்தமாக இவரிடம் 900 கோடி வரை சொத்து மதிப்பு இருக்கிறது. இவர் எட்டாவது இடத்தை பெற்றிருக்கிறார்.
அல்லு அர்ஜுன்: தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 1200 கோடி வரை இருக்கும். அந்த வகையில் இவருடைய ஒரு படத்தின் சம்பளமாக 150 கோடியே பெற்று ஏழாவது இடத்தில் இருக்கிறார்.
ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்து வரும் ரஜினியின் மொத்த சொத்து மதிப்பு 5200 கோடி. 150 கோடி முதல் 200 கோடி வரை சம்பளமாக ஒரு படத்திற்கு வாங்குகிறார். இவர் பணக்கார லிஸ்டில் ஆறாவது இடத்தில் இருக்கிறார்.
விஜய்: வசூல் மன்னனாகவும் ஆட்டநாயகனாகவும் ஜொலித்து வரும் விஜய் தற்போது வரை ஒரு படத்திற்காக 200 கோடி வரை சம்பளத்தை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். அந்த வகையில் இவரிடம் கிட்டத்தட்ட 3600 கோடி சொத்து மதிப்பு இருக்கிறது.
அமீர்கான்: இவரின் சொத்து மதிப்பு 1892 கோடி. ஒரு படத்திற்காக சம்பளமாக 200 கோடி வரை பெற்று வருகிறார். இவர் நான்காவது இடத்தில் இருக்கிறார்.
அக்ஷய் குமார்: இவரின் சொத்து மதிப்பு 2500 கோடி வரை இருக்கிறது. இவர் ஒரு படத்திற்காக 150 கோடி சம்பளத்தை பெறுகிறார். தற்போது சொத்துக்களை குவித்து வைத்திருக்கும் டாப் இடத்தில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
சல்மான் கான்: இவரின் சொத்து மதிப்பு 2900 கோடி வரை இருக்கிறது. ஒரு படத்திற்காக சம்பளமாக 220 கோடி வரை பெற்று வருகிறார். அந்த வகையில் டாப் பணக்காரர்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
ஷாருக்கான்: எட்டாத உயரத்தில் உச்சாணிக்கொம்பில் இருக்கிறவர் தான் ஷாருக்கான். இவருடைய சொத்து மதிப்பு 6300 கோடி வரை இருக்கிறது. இவர் ஒரு படத்திற்காக 150 கோடி முதல் 250 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். அதனால் தான் பணக்காரர்கள் லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறார்.
ரஜினி விஜய்க்கு இடையே நடக்கும் வார்
- ஆசியாவிலேயே நம்பர் 1 என நிரூபித்த தலைவர்
- நம்பர் ஒன் இடத்தை உறுதி செய்த தளபதி 69
- விஜய் போட்டுள்ள 5 மெகா திட்டம்