2025-இல் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்கள்.. முதலிடத்தை பிடித்த புஷ்பா நாயகன்

Allu Arjun: சமீபகாலமாக படத்தின் பட்ஜெட்டை காட்டிலும் நடிகர்களின் சம்பளம் தான் அதிகமாக இருக்கிறது. அவ்வாறு 2025 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி முதல் 10 இடத்தை பிடித்த நடிகர்களை பார்க்கலாம்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். புஷ்பா படத்தின் மூலம் இவரது மார்க்கெட் எகிறிய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு 300 கோடி சம்பளம் பெற்று இருக்கிறார்.

இரண்டாம் இடத்தில் தளபதி விஜய் இருக்கிறார். வசூல் மன்னன் என்று அழைக்கப்படும் இவரது படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் ஜனநாயகன் படத்திற்கு 275 கோடி சம்பளம் பெற்று இருக்கிறார்.

பாலிவுட்டின் கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் ஒரு படத்திற்கு 150 கோடியில் இருந்து 250 கோடி வரை சம்பளம் பெறுகிறார். இவரது மொத்த சொத்து மதிப்பு 6300 கோடி என்று சொல்லப்படுகிறது.

2025-ல் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள்

நான்காவது இடத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கிறார். இவர் தற்போது கூலி படத்தில் நடித்துவரும் நிலையில் ஒரு படத்திற்கு 125 கோடியில் இருந்து 270 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

பாலிவுட் நடிகர் அமீர்கான் பாக்ஸ் ஆபிஸில் ஒரு வெற்றிகரமான நடிகராக இருந்து வருகிறார். அதன்படி அவரது சம்பளம் 100 கோடியில் இருந்து 275 கோடி வரை இருக்கிறது.

பாகுபலி நடிகர் பிரபாஸ் ஆறாவது இடத்தில் இருக்கிறார். சலார், கல்கி என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இவரது சம்பளம் 100 கோடியில் இருந்து 200 கோடி வரை உள்ளது.

அஜித் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இப்போது குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ள நிலையில் அவரது சம்பளம் 165 கோடியாகும்.

சல்மான் கான் பல ஹிட் படங்களை கொடுத்த நிலையில் அவரது சொத்து மதிப்பு 450 கோடிக்கு மேல உள்ளது. ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 150 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் கமலஹாசன் இருக்கிறார். இப்போது தயாரிப்பு, நடிப்பு என இரண்டிலும் பிஸியாக இருக்கும் கமல் 140 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார்.

பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தரமான படங்களை கொடுத்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு 2500 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அவரது சம்பளம் 60 கோடியில் இருந்து 135 கோடி வரை உள்ளது.

Leave a Comment