ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கோடிகளில் புரளும் டாப் 10 நடிகர்களின் சம்பள விவரம்.. கதை கேட்காமல் ஜாலியா படம் பண்ண 100 கோடி வாங்கிய நடிகர்

Top 10 Highest Paid Actors in Tamil cinema: “வாழ்க்கை ஒரு வட்டம் கீழே இருக்கிறவன் மேல போவான், மேல இருக்கிறவன் கீழே வருவான்” என்பது போல வருடத்திற்கு வருடம் நடிகர்கள் பாக்ஸ் ஆபிஸில் தாங்கள் நடிக்கும் படங்களின் வசூலை பொருத்து டாப் டென்னில் தங்களின் இடங்களை மாற்றி மார்க்கெட்டை கூட்டவும் குறைக்கவும்  செய்கின்றனர். பட தயாரிப்பில் பெரும்பங்கு நடிகர்களின் சம்பளத்திற்காகவே செலவு செய்யப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.

டாப் டென்னில் முதலாவதாக இருப்பவர் கமல்ஹாசன், அதிரடி ஆக்சன் ஆன விக்ரம் படத்தில் 150 கோடி வரை வாங்கி உள்ளதாக தகவல். மேலும் மணிரத்தினத்தின் தக்லைப்பில் என்ட்ரி கொடுக்க இருக்கும் கமல் இப்படத்திற்காக 125 கோடி என்பதை பிக்ஸ் செய்து உள்ளார். இதில் சைடு பிசினஸ் ஆக பிக் பாஸ் வேறு.

இரண்டாவதாக  அண்ணாத்த, தர்பார் என கொஞ்சம் சறுக்கிய பின் ஜெயிலரில் அதிரடி காட்டிய ரஜினி, தனது ஊதியத்தை லோகேஷ் கனகராஜின் தலைவர் 171 காக 120 கோடி என பிக்ஸ் செய்து உள்ளார்.

மூன்றாவது வதாக அஜித் விடாமுயற்சிக்காக 120 கோடி சம்பளமாக பெற்றுக் கொண்டுள்ளார். குறைந்த கால்ஷீட் நிறைவான சம்பளம் என எப்போதுமே டாப் டென்னில் பலமாக பாத்தியம் போட்டு உள்ளார் மக்கள் நாயகன் அஜித்.

Also Read: இந்த வருடம் 500 கோடி கிளப்பில் இணைந்த அடுத்த படம்.. லியோவை ஓரம் கட்டிய ஆக்சன் ஹீரோ

வெங்கட் பிரபுவுடன் இணையும் விஜய்  தனது அடுத்த படமான விஜய் 68 காக, கதை கேட்காமல், ஜாலியாக 120 கோடி சம்பளம் மட்டும் கேட்டு வாங்கி உள்ளார். அரசியல்னால ரொம்ப ஸ்ட்ரெஸ் போல, ஜாலியா கதை கேட்டு ஜாலியா படம் பண்ணி வருகிறார் தளபதி.

அடுத்ததாக தனுஷ் தனது மார்க்கெட்டை ஜிக்ஜாக்கில் கொண்டு செல்கிறார் அதாவது பாக்ஸ் ஆபிஸில் தனது படத்திற்கு இருக்கும் வசூலையும் படத்தின் பட்ஜெட்டையும் பார்த்து 20 முதல் 60 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் தனுஷ்.

அடுத்த இடத்தில்  நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன், சமீப காலமாக 35 கோடி வரை சம்பளம் வாங்கியவர் கமல் தயாரிப்பில் தான் நடிக்கும் படத்திற்காக 50 கோடி ஒப்பந்தம் போட்டு உள்ளார்.

பின்னாடி வந்தவர்கள் முன்னாடி செல்ல ரொம்ப காலமாக திரைத்துறையில் போராடி வரும் சூர்யா தற்போது சிறுத்தை சிவாவின் கங்குவாக்காக 30 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளார். இப்படத்தின் வெற்றிக்கு பின் தனது  மார்க்கெட்டை உயர்த்த திட்டமிட்டுள்ளார் சூர்யா.

நடிகர், குணச்சித்திர நடிகர், வில்லன் என பலமொழிகளிலும் கட்டம் கட்டி வரும் விஜய் சேதுபதி பாலிவுட்டின் மாடன் வில்லனாக மாறியுள்ளார். தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் தான் நடிக்க இருக்கும் அடுத்த படத்திற்காக 25 கோடி வாங்கி உள்ளதாக தகவல்.

படத்திற்கு படத்திற்கு படம் தனது கெட்டப்பை மாற்றும் விக்ரம், பா ரஞ்சித் இயக்கத்தில் தான் நடிக்கும் தங்கலான் படத்திற்காக  15 கோடி ஊதியம் பெற்றுள்ளார்.

கடைசியாக, “ஒழுங்கா வர்றநானு பார்க்காத, ஒழுங்கா நடிக்கிறநானு பாரு” என்று ரசிகர்களை தெறிக்க விட்ட நமது பத்து தல சிம்பு அவர்கள் வாயால வாழ்ந்து கெட்டவர் வரிசையில் முதல் இடத்திலும் சம்பளத்துல 10 கோடி வாங்கி பத்தாவது இடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Also Read: 2023 நம்மளை உறைய வைத்த 4 பேர்.. நாயகனுக்கு ரிவீட் அடித்து மார்க் ஆண்டனி பட வில்லன்

Trending News