வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இந்திய நடிகர்களின் டாப் 10 லிஸ்ட்.. பாலிவுட் ஹீரோக்களை ஓடவிட்ட தளபதி!

இந்திய சினிமாவில்  டாப் 10  நடிகர்களின் லிஸ்ட்  தற்போது சோசியல் மீடியாவில் அவர்களுடைய ரசிகர்களால்  பேசும் பொருளாக மாறியிருக்கிறது. இந்த லிஸ்டை பார்த்த பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் சோசியல் மீடியாவையே ரணகளம் செய்து கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என வெவ்வேறு மொழிகளில் இருக்கும் நடிகர்களை எல்லாம் ஓடவிட்டு முதலிடத்தை இளைய தளபதி விஜய் பிடித்திருக்கிறார்.

இதனால் உச்சகட்ட சந்தோசத்தில் தளபதி  ரசிகர்கள் இருக்கின்றனர். படத்தில் மாஸ் காட்டுவது, நடனம், நடிப்பு என எல்லா வகையிலும் பிச்சு உதறும் தளபதி விஜய்க்கு முதலிடம் கிடைத்திருப்பது கோலிவுட்டிற்குகே பெருமை. இதைத்தொடர்ந்து இரண்டாமிடம் ஜூனியர் என்டிஆர் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. இவர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பு பெற்று திரையரங்கு வசூல் வேட்டை ஆடியது.

அதைப்போன்று மூன்றாவது இடம் தெலுங்கு நடிகர் பிரபாஸ் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. 4-வது இடம் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்துள்ளது. ஐந்தாவது இடம் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து ஆறாவது இடம் தல அஜித் பெற்றிருக்கிறார்.

தல அஜித்தும் தளபதி போன்ற தன்னுடைய தனித்துவமான நடிப்பை காண்பித்து எக்கச்சக்கமான ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர். இவர் படங்கள் என்றாலே திரையரங்கில் விழாக்கோலம் போல் ரசிகர்கள் பேராதரவை கொடுப்பது இவருடைய நடிப்பிற்காக மட்டுமே. அத்துடன் இயல்பாக இருக்கும் இவருடைய குணாதிசயம் ரசிகர்களை மேலும் அவர் வசம் ஈர்க்கிறது.

இதைத்தொடர்ந்து ஏழாவது இடம் கேஜிஎஃப் திரைப்படத்தின் நாயகன் கன்னட ராக்கிங் ஸ்டார் யாஷ் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. இதைப்போன்றே 8-வது இடம் தெலுங்கு நடிகர் ராம்சரண் அவர்களுக்கும், 9-வது இடம் மீண்டும் ஒரு தமிழ் நடிகரான நடிகர் சூர்யாவிற்கு கிடைத்திருக்கிறது.

பத்தாவது இடம் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவிற்கு கிடைத்திருக்கிறது. இப்படி இந்த வருடத்திற்கான டாப் 10 இந்திய கதாநாயகர்களின் லிஸ்டில் முதல் இடத்தை தளபதி விஜய்யும், ஆறாவது இடத்தை தல அஜித்தும், 9-வது இடத்தை சூர்யாவும் பெற்றதற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதேபோன்று பெரும்பாலான இடத்தைப் பிடித்த தெலுங்கு நடிகர்களுக்கும் அவர்களது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

Trending News