திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

டிஆர்பி-யை அடித்து நொறுக்கும் டாப் 10 சீரியல்கள்.. பட்டையைக் கிளப்பும் சீரியல்களின் ரேட்டிங் லிஸ்ட்

சின்னத்திரை சீரியல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் ஆனது இணையத்தில் வெளியாகி ட்ரண்ட் ஆகி வருகிறது. அதிலும் விஜய் டிவி சீரியல்கள் ஆனது சன் டிவியுடன் போட்டி போட்டுக் கொண்டு டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்து வருகிறது. இதனை அடுத்து எந்தெந்த சீரியல்கள், எந்தெந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை கீழ்காணும் லிஸ்டில் காணலாம்.

இதில் 10-வது இடத்தில் ஈரமான ரோஜாவே 2 சீரியலும், 9-வது இடத்தில் ஆனந்த ராகம் சீரியலும், 8-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும், 7-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் இடம் பிடித்துள்ளது.

மிஸ்டர் மனைவி: இந்த சீரியலின் ஹீரோ மற்றும் ஹீரோயின்க்கு இடையே காதல் பூவானது மலர தொடங்கியுள்ளது. ஆனால் தங்களுக்குள் இருக்கும் காதலை யார் முதலில் வெளிப்படுத்துவது என்ற தயக்கத்திலேயே இந்த சீரியல் ஆனது சென்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அனைவரின் ஃபேவரிட்  ஆக மாறி வரும் மிஸ்டர் மனைவி சீரியலில் எப்பொழுது இவர்களுக்குள் ரொமான்ஸ் காட்சிகள் ஆனது வரும் என்ற ஏக்கத்திலேயே ரசிகர்கள் இருந்து வருகின்றனர். மிஸ்டர் மனைவி சீரியல் ஆனது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

Also Read: புது சீரியல் என்ட்ரியால் பாய் பிரண்டுடன் ஓவர் நெருக்கம் காட்டும் ஆல்யா.. அம்மணி சிக்கும் அடுத்த சர்ச்சை

சுந்தரி: இந்த சீரியலில் கார்த்திக் எப்படியாவது சுந்தரியை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இருந்து வருகிறார். ஆனால் அணுவை வைத்து ஒவ்வொரு முறையும் தப்பித்து வரும் இவரின் முகத்திரை எப்பொழுது கிழியும் என்ற ஆவலில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அனுவிற்கு எப்பொழுது கார்த்திக் விவகாரம் தெரிய வரும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சுந்தரி சீரியல் ஆனது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 5-வது இடத்தில் உள்ளது.

எதிர்நீச்சல்: இந்த சீரியலில் குணசேகரன் அப்பத்தாவின் ஆட்டத்திற்கு எல்லாம் தலையாட்டி, பொம்மையாகவே மாறி வருகிறார். அதிலும் ஆதிராவின் திருமணத்தை சாதகமாக வைத்து எஸ் கே ஆர் இன் தம்பிகள் குணசேகரனை அவமானப்படுத்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தினம் தினம் யூகிக்க முடியாத சீரியல்களில் ஒன்றாக உள்ள எதிர்நீச்சல் சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

இனியா: இந்த சீரியலில் விக்ரம்க்கு எதிரான ஆதாரங்கள் மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒருவருக்கு செய்த கர்மா விடாது என்பது போல் விக்ரம் உடைய வாழ்க்கையில் பல்வேறு  தடைகளை எதிர்கொண்டு வருகிறார். அதிலும் எந்த நேரத்திலும் இனியாவிற்கு விக்ரம் பற்றிய உண்மை தெரிந்து விடுமோ என்ற உணர்விலேயே இந்த  சீரியல் ஆனது நகர்ந்து கொண்டிருக்கிறது. இனியா சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 3-வது இடத்தில் உள்ளது.

Also Read: சீரியலில் பட்டையை கிளப்பும் சினிமா இயக்குனர்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்

கயல்: இந்த சீரியலில் எழிலின் காதலை எப்படியாவது கயல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் குடும்பத்தில் உள்ளவர்கள் இருந்த வருகின்றன. ஆனால் கயல் உடைய சொந்த பந்தங்களே எப்படியாவது இவர்களை, ஒன்று சேர விடாமல் தடுக்க வேண்டும் என்று பல சூழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கயல் சீரியல் ஆனது பின்னுக்கு தள்ளப்பட்ட நிலையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

வானத்தைப்போல: இந்த சீரியலில் துளசி தனது மனதில் ரணமாய் அறுத்துக் கொண்டிருக்கும், ஒரு விஷயத்தை எப்படி சமாளிக்க போகிறோம் என்ற வருத்தத்தில் இருந்து வருகிறார். ஆனால் அந்த விஷயம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்தால் என்னவெல்லாம் பிரச்சனை நடக்குமோ என்று யூகிக்க முடியாத அளவிற்கு இந்த சீரியல் ஆனது மிகவும் பரபரப்பான கட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. வானத்தைப்போல சீரியல் ஆனது அதிரபுதுதியான முன்னேற்றத்தில் முதலாவது இடத்தில் உள்ளது.

Also Read: 1200 எபிசோடுகளை கடந்த சூப்பர் ஹிட் சீரியல்களை ஊத்தி மூடிய விஜய் டிவி.. ஏப்ரலில் அடுத்தடுத்து நிறைவடையும் 4 சீரியல்கள்

இவ்வாறு இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து ஒரே சேனலை முதலிடம் பிடித்து வருகிறது. அதிலும் சன் டிவிக்கு எதிராக விஜய் டிவி சீரியல்கள் போட்டி போட்டுக் கொண்ட டிஆர்பி லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது. அதிலும் இனியா சீரியல் அசுர வேகத்திலேயே முன்னேறி மற்ற சீரியல்களுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News