ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

டிஆர்பி-யில் தெறிக்க விட்ட டாப் 10 சீரியல்கள்.. அசுர வேகத்தில் முன்னேறி பட்டையை கிளப்பும் எதிர்நீச்சல்

சின்னத்திரை சீரியல்களின் டிஆர்பி லிஸ்ட் ஆனது இணையத்தில் வெளியாகி தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் இருக்கும் டாப் 10 சீரியல்களைப் பற்றி பார்ப்போம்.

இதில் 10-வது இடத்தில் பாரதி கண்ணம்மா சீரியலும், 9-வது இடத்தில் ஆனந்த ராகம் சீரியலும், 8-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும், 7-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் இடம் பிடித்துள்ளது.

கண்ணான கண்ணே: இந்த சீரியலில் மீராவும் யுவாவும் எங்கு இருக்கிறார்கள் என்பது தற்பொழுது கௌதம் குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மீரா தனது குடும்பத்துடன் சேர்ந்து விட்டால் மேனகாவின் சூழ்ச்சிக்கும் ஆட்டத்திற்கும் விரைவில் முடிவு கட்டி விடுவர். ஆனால் அந்த நாள் எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கண்ணான கண்ணே சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 6-வது இடத்தில் உள்ளது.

Also Read: ஆலியா, ரியாவை தொடர்ந்து புதிய சந்தியா ஐபிஎஸ்.. ஜீ தமிழில் இருந்து இறக்கி விடப்பட்ட நடிகை

இனியா: இந்த சீரியலில் இனியா தனது அக்காவின் திருமணத்தை எப்படியாவது நடத்தி விட வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து வருகிறார். ஆனால் இந்த திருமணம் நடக்கக் கூடாது என்ற நோக்கத்தில் யாழினியின் மீது திருட்டுப் பழியை சுமத்தி உள்ளனர் சிலர். தனது அக்காவின் மேல் படிந்துள்ள இந்தக் கரையை இனியா எவ்வாறு முறியடிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இனியா சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 5-வது இடத்தை பிடித்துள்ளது. 

எதிர்நீச்சல்: இந்த சீரியலில் எப்படியாவது குணசேகரன் தான் நினைத்ததை  நடத்திவிட வேண்டும் என்ற அகங்காரத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில்  ஆதிராவிற்கு, கரிகாலன் மற்றும் அருண் இவர்களில் யாருடன் திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எதிர்நீச்சல் சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

சுந்தரி: இந்த சீரியலில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சிகிச்சையின் மூலம் சுந்தரியின் கண் பார்வையானது குணமாகி உள்ளது. ஆனால் அனு மற்றும் கார்த்திக் உடைய விவகாரம் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த நிலையில் அனுவிற்கு எப்பொழுது தெரிய வரும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவே இருந்து வருகிறது. சுந்தரி சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

Also Read: நீ அடங்க மாட்டியா காந்தாரா சரவணா.. மிச்சர், பூந்தி வித்தவனுக்கு ஏண்டா இவ்வளவு பில்டப்

வானத்தைப்போல: இந்த சீரியலில் பொன்னியின் செயலால் பெரிய கண்டத்தில் சிக்கியிருந்த சின்ராசுவின் குடும்பம் தற்பொழுது அதிலிருந்து மீண்டுள்ளது. மேலும் பொன்னி, சரவணனின் சுய ரூபத்தை புரிந்து கொண்டதன் மூலம் தனது காதலை அடியோடு வெறுத்துள்ளார். இந்நிலையில் பொன்னி சின்ராசுவை மறைமுகமாக காதலிக்க தொடங்கியுள்ளார். மேலும் இவர்களின் ரொமான்ஸ் காட்சி எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். வானத்தைப்போல சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

கயல்: இந்த சீரியலில் கயல் தனது குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை ஒரு பெண்ணாக இருந்து எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை மிக அழகாக காண்பித்துள்ளனர். அதிலும் சொந்தமாக இருக்கக்கூடிய பெரியப்பாவின் சூழ்ச்சிகளே அதிகம் நிறைந்துள்ளது. இவற்றையெல்லாம் கயல் எப்படி சமாளித்து வர போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கயல் சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Also Read: நிலாவுக்கு நீங்க தாத்தா தான், வெறுப்பான கோபி.. பாக்யாவை போல் கொடுமையில் சிக்கிய மருமகள்

இவ்வாறு பிரபல சேனலை பின்னுக்குத்  தள்ளிய நிலையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 6 இடங்களையும் ஒரே சேனலை பிடித்துள்ளது. அதிலும் எதிர்நீச்சல் சீரியலானது ரசிகர்களின் ஆதரவை பெற்று டாப் கியரில் போய்க்கொண்டிருக்கிறது.

Trending News