சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் இருக்கும் டாப் 10 சீரியல்கள்.. அசுர வேகத்தில் முன்னேறும் புத்தம் புது சேனல்

ஒவ்வொரு வாரமும் எந்த சீரியலை ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்பதன் அடிப்படையில் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் இணையத்தில் வெளியாகும், அந்த வகையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் டாப் 10 சீரியல்களை பற்றி பார்ப்போம். ஆனால் இந்த லிஸ்டில் சற்றும் எதிர்பாராத அளவிற்கு சன் டிவியின் புத்தம் புது சீரியல்கள் முன்னேறி இருப்பது விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது.

இதில் 10-வது இடத்தை எலியும் பூனையும் போல் இருக்கும் கணவன் மனைவிகளுக்கு இடையே இருக்கும் செல்ல சண்டைகளை அனுதினமும் காட்டிக் கொண்டிருக்கும் சிறக்கடிக்க ஆசை என்ற சீரியல் பிடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக 9-வது இடம் ஜீ தமிழ் சேனலின் மானத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு சீரியலான கார்த்திகை தீபம் சீரியல் பிடித்துள்ளது.

Also Read: விஷ்ணு- சம்யுக்தா சண்டையை ஆரம்பித்ததை இவர்தானா? பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் செய்த மட்டமான வேலை

அதேபோல் 8-வது இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கும், 7-வது இடம் பாக்கியலட்சுமி சீரியலுக்கும் கிடைத்துள்ளது. இந்த இரண்டு சேனல்களும் டாப் 5 இடத்திற்குள் வந்துவிடும். ஆனால் கடந்த சில மாதங்களாகவே முதல் ஐந்து இடத்தை பிடிக்க முடியாமல் திணறுகிறது.

இதன் தொடர்ச்சியாக 6-வது இடம் கணவனே கண்கண்ட தெய்வம் என வாழ வேண்டிய அவசியம் இல்லை. தன்னை விட்டு வேற ஒரு பெண்ணை தேடி சென்றால் அந்த கணவருக்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை காட்டிக் கொண்டிருக்கும் சுந்தரிக்கு கிடைத்துள்ளது.

Also Read: எவ எவன் கூட அட்ஜஸ்மென்ட் பண்ணா உங்களுக்கு என்னடா.. கிழித்து தொங்கவிட்ட எதிர்நீச்சல் முரட்டு நடிகை

5-வது இடம், இந்த சீரியலை பார்த்த பிறகு தான் தூங்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் மாலை நேரம் எப்போது வரும் என துடிதுடித்துக் காத்துக் கொண்டிருக்கும் சின்னத்திரை ரசிகர்களின் இஷ்டமான சீரியல் ஆன எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைத்துள்ளது. இதில் சுவாரசியத்திற்கும் விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லாமல் கதையையும் யூகிக்க முடியாத அளவிற்கு திருமுருகன் சிறப்பாக இயக்கிக் கொண்டிருக்கிறார்.

3-வது மற்றும் 4-வது இடத்தில் ஒரே டிஆர்பி ரேட்டிங்கை பெற்ற மிஸ்டர் மனைவி மற்றும் வானத்தைப் போல போன்ற இரண்டு சன் டிவி சீரியல்களும் பிடித்துள்ளது. 2-வது இடம் புத்தம் புது சீரியல் ஆன இனியா சீரியலுக்கு கிடைத்துள்ளது. முதல் இடத்தை வழக்கம் போல் கயல் சீரியல்தான் பிடித்திருக்கிறது.

Also Read: குணசேகரனுக்கு எதிரான சூழ்ச்சியில் ஒட்டுமொத்த குடும்பம்.. அல்லக்கை கதிருக்கு சரியான ஆப்பு வைக்கும் ஜனனி

Trending News