வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

2023 உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய 10 படங்கள்.. இவர் நடிச்சா ஹிட் என ராசியான வில்லன் நடிகர்

Top 10 tamil movies in 2023: “கலை வளர்க்க வந்து கட்சி அமைத்து ஆட்சி பிடித்ததும் இந்த சினிமா தான், வெள்ளி திரைல தங்கம் விளைவிக்க வந்ததும் இந்த சினிமா தான்” என்ற கவிஞரின் கூற்றுப்படி திரையில் படங்கள் பெறும் வசூலை பொறுத்து தான் ரசிகர்களின் பேசு பொருளாக அதன் வெற்றி அமைகிறது.

இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு சிறப்பான வருடம் என்றே சொல்லலாம். பல படங்கள் வெளிவந்து வசூலில் தன்னிறைவு அடைந்தது. பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் வெளுத்து வாங்கிய படங்களின் தொகுப்பு இதோ,

ஜெயிலர்: நீண்ட இடைவெளிக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் உலக அளவில் வசூலில் 650 கோடி குவித்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. பல்வேறு திருப்பங்கள் உடன் ஆக்சன் பிக்சராக களம் இறங்கிய ஜெயிலரின் முதல் நாள் வசூல் மட்டுமே 50 கோடியை தாண்டியது. ஜெயிலரின் மூலம் பாக்ஸ் ஆபிஸ் கிங் என தன்னை நிரூபித்தார் தலைவர்.

லியோ: ரத்த களரியுடன் ஆக்சன் படங்களின் ஜாம்பவானாக தன்னை நிரூபித்து வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ உலக அளவில் வசூலில் 620 மேலாக வசூலில் சாதனை புரிந்தது. படத்தில் விஜய், பார்த்திபன் லியோ என இருவேறாக பிரிந்தாலும் ஆக்ஷனில் விஜய் வெறி கொண்டு சீறி உள்ளார்.

பொன்னியின் செல்வன் 2: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழகத்தின் தவிர்க்க முடியாத மன்னனான ராஜராஜ சோழனின் கதையை கருவாகக் கொண்ட பொன்னியின் செல்வன் வசூலில் உலக அளவில் கிட்டதட்ட 350 கோடியை வசூல் செய்தது. பாகுபலி ரேஞ்சுக்கு எதிர்பார்க்கப்பட்டாலும் ஆரவாரம் இன்றி நிதானமாக வென்றார் பொன்னியின் செல்வன்.

வாரிசு: இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்த விஜய்யின் முதல் படம் வாரிசு. தந்தை சொல் கேட்காத மகன் தந்தைக்கு பிறகு குடும்பம் மற்றும் தொழில் இரண்டையும் எவ்வாறு நிலை நிறுத்தினார் என்பதை கருவாகக் கொண்டு வெளிவந்த குடும்ப திரைப்படம் வாரிசு வசூலில் சுமார் 300 கோடியை எட்டியது.

Also Read: 2023 நம்மளை உறைய வைத்த 4 பேர்.. நாயகனுக்கு ரிவீட் அடித்து மார்க் ஆண்டனி பட வில்லன்

துணிவு: இன்றைய நடைமுறையில் மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களின் ஆசையை தூண்டி ஏமாற்றிய வங்கிகளின் முகத்திரையை துணிச்சலுடன் கிழித்த அஜித்தின் துணிவு உலக அளவில் வசூலில் 210 கோடியை தாண்டியது போனி கபூர் தயாரிக்க எச் வினோத் படத்தை இயக்கியிருந்தார்.

மார்க் ஆண்டனி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடித்த மார்க் ஆண்டனி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்ததை விட100 கோடியை தாண்டி மாபெரும் வெற்றி பெற்றது.. நடிப்பு அரக்கன் என்ற பட்டத்திற்கு ஏற்றவாறு  பாட்டு, டான்ஸ், வசனம், வில்லத்தனம் என அனைத்திலும் தெறிக்க விடுகிறார் எஸ் ஜே சூர்யா. இவர் வில்லனாக நடிக்கும் படங்கள் வெற்றி பெறுவதை அடுத்து ராசியான வில்லனாக கோலிவுட்டில் வலம் வருகிறார் எஸ் ஜே சூர்யா.

மாவீரன்: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் இணைந்து நடித்த மாவீரன் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தின் வசூல் கிட்டத்தட்ட 89 கோடி ஆகும்.  அடுத்து பொங்கல் ரிலீஸ் ஆக சிவகார்த்திகேயனின் அயலான் காத்துக் கொண்டிருக்கிறது.

மாமன்னன்: சமூக கருத்துடன் சொசைட்டிக்கு புதியதாக ஏதாவது கூறவேண்டும் என்று முனைப்புடன் வரும் இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷ் வடிவேலு போன்றோர் நடித்து இருந்தனர். காமெடியாக வலம் வந்த வடிவேலுவை பொறுப்பான தந்தையாக கண்ணியமிக்க அரசியல்வாதியாக காட்டினார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

விடுதலை: ஜெயமோகனின் கதையை அடிப்படையாகக் கொண்டு வெற்றி மாறன்  இயக்கிய விடுதலை, பழங்குடி மக்களின் போராட்டங்களையும் அவர்களின் வலியை உணர்ந்த நேர்மையான காவலாளரையும் அங்கீகரிக்கும் விதமாக எடுக்கப்பட்டதே விடுதலை. வசூலில் கிட்டத்தட்ட 40 கோடியை எட்டியது விடுதலை.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா வெளிவந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் அதே ஆர்வத்துடன் ரசிகர்கள்  ஜிகர்தண்டா xx  எதிர்பார்த்து இருந்தனர் அரசியல் சூழ்ச்சிகளால் பழங்குடி மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை அப்பட்டமாக விவரித்து இருந்தது இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

Also Read: 2023 ல் பெரிய ஹீரோக்களை திரும்பி பார்க்க செய்த 6 இயக்குனர்கள்.. சித்தா மூலம் சிந்திக்க வைத்த இயக்குனர்

Trending News