சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அந்த விஷயத்தில் சமந்தாவை தூக்கி சாப்பிட்ட பூஜா ஹெக்டே.. பீஸ்ட் பட நடிகைனா சும்மாவா!

கடந்த 7 நாட்களில் அதிகமாய் தேடப்பட்ட நடிகைகளில் தமிழ் படங்கள் நடித்தவர்கள் இடம் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

முதலாம் நபராக முகமூடி படத்தின் மூலம் அறிமுகமாகி இந்தி தெலுங்கு என குட்டிக்கரணம் போடும் வெற்றி நாயகி பூஜா ஹெக்டே.

இவர் 2010ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் ரன்னர் அப் வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த தேடலில் அஞ்சான், நான் ஈ படத்தின் மாஸ் நடிகை சமந்தா இடம் பெற்றது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரு மகிழ்ச்சியை தந்துள்ளது.

ரசிகர்களை விடவும் சம்மு பூஜா மிகவும் சந்தோசமாக இருப்பதாக நமபத்தகுந்த வட்டாரத்தின் தகவல். சமந்தா சமீபத்தில் வெளிவந்த ஃபேமிலி மன் 2 படத்தின் மூலம் பல சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜயுடன் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருவதால் அவரைப் பற்றிய தேடல் அதிகமாக இருந்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

pooja-vijay
pooja-vijay

Trending News