வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

பிளாப் படங்களை கம்மியா கொடுத்த 2 ஹீரோக்கள்.. விஜய், அஜித் எல்லாம் இந்த லிஸ்ட்ல இல்ல

Kollywood Heroes: இப்போதெல்லாம் ஒரு ஹீரோவின் படம் வருடத்திற்கு ஒரு முறை ரிலீஸ் ஆவது என்பது மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. ஒரு படத்திற்காக வருட கணக்கில் மெனக்கிடுவதால், அந்த படம் தோல்வி அடைந்ததும் அந்த ஹீரோக்கள் சினிமாவில் இருந்து காணாமலே போய்விடுகிறார்கள். வெற்றி நாயகன் என்பது எத்தனை படங்கள் நடிக்கிறார்கள் என்பதை தாண்டி நடித்த படங்களில் வெற்றி படங்கள் எத்தனை என்பதை வைத்துதான் முடிவு செய்யப்படுகிறது.

சமீப காலமாக சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகமாகி விட்டதால் ஒரு படம் வெற்றி அல்லது தோல்வி என்பதை நெட்டிசன்களே முடிவு செய்து கொண்டு இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்தும் உண்மையான நிலவரம் என்பது வெளி வருவது இல்லை. இதனால் அவரவர் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் ஹிட் என்று அவர்களே ஒரு மாய பிம்பத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

Also Read:மதத்தால் சர்ச்சைக்குள்ளான சண்டைக்கோழி நடிகை.. ஓவர் நைட்டில் காணாமல் போன விஜய் பட ஹீரோயின்

அதற்கு முன்பெல்லாம் ஒரு படம் வெற்றியா அல்லது தோல்வியா என்பது சரியான புள்ளி விவரத்துடன் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து அறிவிக்கப்படும். இதில் கம்மியான பிளாப் படங்கள் கொடுத்த இரண்டு முன்னணி ஹீரோக்கள் இருக்கிறார்கள். இப்போது கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்று சொல்லப்படும் விஜய், அல்லது டாப் ஹீரோவாக இருக்கும் அஜித் குமாரோ இந்த லிஸ்டில் இல்லை. அவர்களை தாண்டி இந்த இரண்டு ஹீரோக்கள் மட்டுமே அதிகமான பிளாப் படங்களை கொடுத்ததில்லை.

இதில் ஒரு ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்கள் ரிலீஸ் ஆகும் அவருக்கு அப்போது தோல்வி படங்கள் என்ற ஒன்று இல்லவே இல்லை. அவரின் சக போட்டியாளரான கமலுடன் போட்டி போட்டு படங்களை ரிலீஸ் செய்த போதிலும் எப்படியும் அவருடைய படங்கள் எல்லாம் 75 நாட்களை தாண்டி வெற்றி கண்டிருக்கிறது. அதேபோன்று இப்போதும் படத்தை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் வெளியில் இருந்தாலும் ரஜினியின் படங்கள் கல்லா கட்டி விடுகின்றன.

Also Read:கடைசி படத்தால் நொந்து நூடுல்ஸ் ஆன விஜய்.. இழுபறியில் தளபதி 68 படப்பிடிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட கம்மியான பிளாப் படங்களை கொடுத்தது மக்கள் திலகம் எம்ஜிஆர் தான். எம்ஜிஆர் நடித்த படங்களில் தோல்வி படங்கள் என்று எதையுமே சொல்லி விட முடியாது. அந்த அளவுக்கு மக்களின் ஆதரவு அவருடைய படங்களுக்கு இருந்தது. அவரின் படங்கள் ஒவ்வொன்றும் வெள்ளி விழா கொண்டாடின. நிறைய படங்கள் நூறு நாட்களை தாண்டியும் தியேட்டரில் ஓடியது.

எம்ஜிஆர் மற்ற தயாரிப்பு நிறுவனங்களுக்கு பண்ணிய திரைப்படங்களாக இருக்கட்டும், இல்லை அவரே தயாரித்து நடித்த திரைப்படங்களாக இருக்கட்டும் அத்தனையும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி அடைந்தனர். இதுவரை தமிழ் சினிமாவில் கம்மியான அளவில் பிளாப் படங்களை கொடுத்தது என்பது எம்ஜிஆர் மற்றும் ரஜினிகாந்த் மட்டும்தான்.

Also Read:விஜய்யின் கொஞ்ச நஞ்ச மானத்தை மொத்தமாக வாங்கிய எஸ்ஏசி.. வாரிசு வசூல் உண்மையா?

Trending News