திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இந்திய அளவில் டாப் 250 படங்களின் வரிசை.. இடத்தை பிடித்த மூன்று தமிழ் படங்கள்!

2021 ஆண்டிற்கான டாப் 250 இந்தியப் படங்களின் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளை சேர்ந்த படங்களும் இடம்பெற்றுள்ளது. அதில் கோலிவுட் சார்பில் மூன்று தமிழ் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வகையில் இந்திய அளவில் தேர்வான சிறந்த 250 படங்களில் 24-வது இடத்தை சார்பட்டா பரம்பரை என்ற படம் பிடித்துள்ளது. பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த சார்பட்டா பரம்பரை திரைப்படமானது சார்பட்டா பரம்பரைக்கும், இடியாப்ப பரம்பரைக்கும் இடையே நடக்கும் பாக்ஸிங் தொடர்பான கதைதான். இந்தப்படத்தில் துஷாரா, கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படம். 1970-களில் நடப்பது போல் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் அமேசான் தளத்தில் கடந்த ஜூலை மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்ததுதான் இந்த படத்தின் வெற்றி எனவும் கூறுகின்றனர்.

Sarpatta-Parambarai-cinemapettai

அதேபோல் 64 ஆவது இடத்தை மண்டேலா திரைப்படம் பிடித்துள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபுவின் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான மண்டேலா திரைப்படம், அரசியல் நையாண்டி தனமான திரைப்படமாக அமைந்தது. இதில் யோகிபாபுவின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றுத் தந்தது.

mandela-cinemapettai
mandela-cinemapettai

மேலும் 153 ஆவது இடத்தை தனுஷின் கர்ணன் திரைப்படம் பிடித்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் பிரம்மிப்பூட்டும் ஆக்ஷன் திரைப்படமாக கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம்தான் கர்ணன். இந்தப்படம் பாமர மக்களின் அத்தியாவசியமான தேவைகளையும், அதற்காக அவர்கள் அனுதினமும் படும் பாட்டையும் வெளிச்சம் போட்டு காட்டியது.

karnan-trp-record
karnan-trp-record

தற்போது இந்திய அளவில் முக்கிய இடத்தை இந்த மூன்று திரைப்படங்களின் பிடித்ததற்கும் இந்தப்படத்தின் படக்குழுவினருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

Trending News