திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தீபாவளியில் மோதிக் கொள்ளும் டாப் 3 நடிகர்கள்.. சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக வரும் பெரும் புள்ளி

ஒவ்வொரு பண்டிகையின் போதும் ரிலீஸ் ஆகும் டாப் ஹீரோக்களின் படங்களை அவர்களுடைய ரசிகர்கள் திரையரங்கில் திருவிழா போல் கொண்டாடுவார்கள். அப்படி, வரும் தீபாவளிக்கு சரவெடியாக கோலிவுட்டின் டாப் 3 நடிகர்களின் படங்களும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்தது போலவே வரும் தீபாவளிக்கு சூப்பர் ஸ்டாருடன் பெரும் புள்ளிகள் கிளாஸ் விடப் போகின்றனர். முதலில் தீபாவளிக்கு விஜய்யுடன், அஜித்தும் மோதுவார்கள் என நினைத்தனர். ஆனால் இந்த முறை ஜெயிலர் படத்துடன் விஜய் படம் மோத போகிறது என பேச்சுகள் அடிபட்டது.

Also Read: விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் ரிலீசுக்கு முன்பே கல்லா கட்ட தொடங்கிய தளபதி 67.. லோகேஷ் மேல் அவ்ளோ நம்பிக்கை

ஆனால் விஜய் படம் கண்டிப்பாக ஆயுத பூஜைக்கு தான் வருகிறது என உறுதி செய்துள்ளனர். தீபாவளிக்கு ஜெயிலர் படத்துடன் மோத போவது அஜித் மட்டுமே. துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தைக் குறித்து கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

இப்போது ஏகே 62 பட வாய்ப்பு விக்னேஷ் சிவன் கையில் இருந்து இயக்குனர் மகிழ்திருமேனி கைக்கு சென்றுள்ளது. மேலும் லைக்கா இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது. ஏகே 62 படத்தில் அனிருத் இசையமைப்பதாக கூறப்பட்டது.

Also Read: கந்தலாகி கிடக்கும் ஏகே 62.. ரணகளத்திலும் கிளுகிளுப்புடன் போஸ் கொடுத்த அஜித் லேட்டஸ்ட் லுக்

தற்போது லண்டனில் இருக்கும் அஜித் கூடிய விரைவில் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பில் இணைய உள்ளார். தீபாவளிக்கு படத்தை வெளியிட வேண்டும் என உறுதியாக அஜித் கூறியுள்ளதால் தற்போது இந்த செய்தி பேசப்படுகிறது. அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படமும் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் படு ஜோராக தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு படங்களும் தீபாவளிக்கு மோதிக் கொள்ளப் போகிறது. ஏற்கனவே பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு ரசிகர்களிடம் பண்டிகை மிஞ்சிய கொண்டாட்டத்தை கொடுத்த நிலையில், இப்போது தீபாவளிக்கும் ரஜினியின் ஜெயிலர் மற்றும் அஜித்தின் ஏகே 62 போன்ற 2 படங்கள் மோதிக் கொண்டு திரையரங்கை தெறிக்க விடப்போகிறது.

Also Read: 90% உறுதியான ஏகே 62.. பிரம்மாண்ட பட்ஜெட்டுடன் ரிலீஸ் தேதியை லாக் செய்த அஜித் படக்குழு

Trending News