வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

டிஆர்பி-யில் முதல் மூன்று இடத்தை பிடித்த சேனல்கள்.. விஜய் டிவி-கே தண்ணி காட்டிய பிரபல டிவி

சின்னத்திரையில் இருக்கும் பல்வேறு சேனல்களுக்கிடையே டிஆர்பியை தக்க வைப்பதற்காக கடும் போட்டி நிலவும். அதிலும் டாப் 3 இடத்தைப் பிடிப்பதற்காக சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற மூன்று சேனல்களுக்கும் இடையே கடும் போட்டி ஏற்படும். ஆனால் கடந்த சில வருடங்களாகவே வழக்கமாக சன் டிவி முதல் இடத்தையும், 2ம் இடத்தை விஜய் டிவியும் பெற்று வருகிறது.

ஆனால் இந்த முறை ஜீ தமிழ் அசுர வளர்ச்சி அடைந்து முன்னேறி உள்ளது. ஏனென்றால் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பேரன்பு, மீனாட்சி பொண்ணு, கார்த்திகை தீபம், தவமாய் தவமிருந்து, நினைத்தாலே இனிக்கும், ரஜினி, மாரி, அமுதாவும் அன்னலட்சுமியும், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களை சுவாரசியமான கதைக்களத்துடன் ஒளிபரப்பு செய்கிறது.

Also Read: குக் வித் கோமாளிலிருந்து துரத்தி விடப்பட்ட ஓட்டேரி.. படமே ஓடலனாலும் அடைக்கலம் கொடுத்த ஹீரோ

இந்த சீரியல்களில் நடிக்கும் கதாநாயகிகள் எல்லாம் படங்களில் வரும் ஹீரோயின்ஸை விட செம க்யூட்டாக இருப்பதால் அவர்களை பார்ப்பதற்காகவே இளசுகளும் அனுதினமும் சீரியலை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அதுமட்டுமின்றி இதில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கலான டான்ஸ் ஜோடி டான்ஸ், சரிகமப போன்ற நிகழ்ச்சிகளும் டிஆர்பி-யில் பட்டையை கிளப்புகிறது.

இதனால் சில வருடங்களாக ஜீ தமிழ் டிஆர்பி-யில் பின்னடைவு சந்தித்த நிலையில் தற்போது தரமான கதைக்களத்தை கொண்ட சீரியல்களின் மூலம் சின்னத்திரை ரசிகர்களை வசியம் செய்திருக்கிறது. இதனால் டாப் 3 இடத்தைப் பிடித்த சேனல்களின் லிஸ்டில் விஜய்க்கு தண்ணி காட்டிவிட்டு 2ம் இடத்தை ஜீ தமிழ் பெற்றிருக்கிறது.

Also Read: குக் வித் கோமாளியில் ஓவர் ஆட்டிட்யூட் காட்டும் கோமாளி.. சீசன் 4க்கு தோல்விக்கு இவர்தான் காரணம்

3-வது இடம்தான் விஜய் டிவிக்கு கிடைத்திருக்கிறது. மேலும் அதரி புதிரியான கதைகளத்தை கொண்ட சீரியல்களின் மூலம் இல்லத்தரசிகளை கட்டிப் போட்டு வைத்திருக்கும் சன் டிவிக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது. இதில் ஒளிபரப்பாகும் கயல், சுந்தரி, வானத்தைப் போல, கண்ணான கண்ணே, எதிர்நீச்சல், இனியா போன்ற அத்தனை சீரியல்களும் ஒவ்வொரு வாரமும் டிஆர்பி யில் அடித்து நொறுக்குகிறது.

எனவே தற்போது வெளியாகியிருக்கும் டாப் 3 சேனல்களின் லிஸ்டில், யாரும் எதிர்பாராத ஜீ தமிழில் இந்த முன்னேற்றம் விஜய் டிவிக்கு தான் பேரதிர்ச்சியாக இருக்கிறது. அத்துடன் பல வருடங்களாக 2ம் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருந்த விஜய் டிவி 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

Also Read: புது சீரியல் என்ட்ரியால் பாய் பிரண்டுடன் ஓவர் நெருக்கம் காட்டும் ஆல்யா.. அம்மணி சிக்கும் அடுத்த சர்ச்சை

Trending News