ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விஜய், கமல் எல்லாம் லேட்டா பாத்துக்கலாம்.. லோகேஷ் கூட்டணிக்கு அடித்துக் கொள்ளும் 4 டாப் ஹீரோக்கள்

Director Lokesh Kanagaraj : லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தலைவர் 171 படத்தை எடுக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கான வேலையில் மும்மரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனாலும் லோகேஷின் லயன் அப்பில் கைதி 2, விக்ரம் 2, லியோ 2, ரோலக்ஸ் என நிறைய படங்கள் இருக்கிறது.

ஆனால் விஜய், கமல் ஆகியோரின் படங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று லோகேஷ் புதிய படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார். இன்று லோகேஷ் தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவர் படத்தை பற்றிய சில அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

லோகேஷுகாக போட்டி போடும் நான்கு ஹீரோக்கள்

அதாவது தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் பெரிய நடிகர்களின் படங்களை தயாரிக்கும் KVN ப்ரொடக்ஷன் உடன் லோகேஷ் கைகோர்க்க உள்ளார். அதுவும் இவரின் படத்தில் நடிக்க இப்போது டாப் ஹீரோக்கள் நால்வர் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ராம்சரணின் கேம் சேஞ்சர்

அதாவது தற்போது ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் கேம் சேஞ்சர் படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அவர் லோகேஷின் படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று லோகேஷ் இடம் கதை கேட்டு வருகிறாராம்.

பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 AD

அடுத்ததாக பிரபாஸ் இப்போது கல்கி 2898 AD படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனாலும் பாகுபலி படத்தை போல் அடுத்த வெற்றி கொடுக்க வேண்டும் என லோகேஷ் உடன் கூட்டணி போட நினைக்கிறார் பிரபாஸ்.

அதேபோல் லோகேஷின் படத்தில் நடிக்க ஜூனியர் என்டிஆர் ஆர்வமாக இருந்து வருகிறார். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது கேஜிஎஃப் பட நடிகர் யாஷ் லோகேஷ் உடன் இணைந்தால் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும். இந்தக் கூட்டணி அமைகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News