வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

விஜய் 69 க்கு மல்லுக்கட்டும் தயாரிப்பு நிறுவனங்கள்.. தங்க வேட்டைக்கு தயாராகும் 4 பெருந்தலைகள்

Top 4 production companies competition for actor vijay’s vijay69 film: இளையதளபதி விஜய், சினிமா அரசியல் என இரண்டையும் விட்டுக் கொடுக்காமல் அனைத்திலும் முதலாக இருக்க வேண்டும் என்ற பேராசை கொண்டிருக்கிறார். ஆனால் தனது திட்டங்களை வெளிப்படுத்தாமல் தனக்குரிய பாணியில் கம்முனு இருந்து வெற்றிக்கு தேவையான காய்களை நகர்த்தி வருகிறார்.

கடந்த ஆண்டு வெளியான லியோ வெற்றிக்கு பின் ஒரு ஜாலியான படம் பண்ண வேண்டும் என்று ஏஜிஎஸ் கூட்டணியில்  இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்தார் விஜய். “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” சுருக்கமாக GOAT என பெயரிடப்பட்ட விஜய் 68 படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  இதனை அடுத்து விஜய் தனது அடுத்த  படம் விஜய் 69க்கான அச்சாரத்தை போட்டுள்ளார்.

வாரிசு படத்தின் போதே தன்னை அணுகிய கார்த்திக் சுப்புராஜிடம் கதை கேட்டார் விஜய். எதிர்பார்த்த அளவு கதை திருப்தி தராததை அடுத்து மீண்டும் ஸ்கிரிப்ட் ரெடி பண்ண சொல்லி கார்த்திக் சுப்புராஜிடம் கூறினார். எப்படியாவது விஜய்யுடன் படம் பண்ண வேண்டும் என்கின்ற முனைப்பில் விஜய்க்காக ஒரு தரமான கேங்ஸ்டர் ஸ்டோரியை ரெடி பண்ணினார் கார்த்திக் சுப்புராஜ். இந்த கதை விஜய்க்கு பிடித்துப் போகவே உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

Also read: அரசியல், சினிமா என இருதலைக்கொல்லியாய் மாறிய விஜய்.. அவரை பார்த்து பயந்து தான் கன்ஃபார்ம் ஆன தளபதி-69

விஜய் 69 க்கு கார்த்திக் சுப்புராஜ் உடன் கூட்டணி என்று முடிவானது. விஜய் என்கிற பெயருக்காகவே படங்கள் ஓடுவது என்பது உறுதியாகி உள்ள நிலையில் தயாரிப்பு நிறுவனங்கள் இவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து இவரது கால்ஷீட் வாங்க தவமாய் தவமிருந்து வருகின்றனர்.

பீஸ்ட் திரைக்கதையின் எதிர்மறையான விமர்சனங்களுக்கு பின்னும் இத்திரைப்படம் வசூலில் நல்ல லாபத்தை சம்பாதித்தது. இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகமாக என்றாலும் விஜய் கேட்க்கும் சம்பளத்தை கொடுத்து விஜய்யின் கால் சீட்டை வாங்க முடிவு பண்ணி உள்ளனர்.

அதே சமயம் விஜய் 69 காக சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனமும், உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ்  நிறுவனமும் மற்றும் ஆர்ஆர்ஆர் பட தயாரிப்பு நிறுவனமான DVV  என்டர்டைன்மென்ட் நிறுவனமும் விஜய்யின் கால் சீட்டை கேட்டு தூது அனுப்பி உள்ளனர். இறுதியாக இந்த லிஸ்டில் ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனமும் விஜய்யை அணுகி உள்ளனர். சன் பிக்சர்ஸ் மற்றும் வேல்ஸ் நிறுவனத்திற்கு இடையே விஜய் 69  தயாரிப்பதற்கு கடுமையான போட்டி நிலவுகிறது.

Also read: விஜய் உடனான சண்டைக்கு தலைவரே வைத்த முற்றுப்புள்ளி..! ஜல்லிக்கட்டு காளையைப் போல் தளபதி கொம்பை சீவி விட்ட தலைவர்

Trending News