வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

2024 தயாரிப்பாளர்களை மிரளவிடும் டாப் 5 ஹீரோக்களின் சம்பளம்.. இப்பவும் கெத்து காட்டும் ரஜினி

Top 5 Actors salary details in Kollywood:இந்திய சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் முன்னணி நடிகர்கள் என்ற சூத்திரத்திற்கு மட்டுமே வணிக ரீதியாக, வசூல் மழை பொழிகிறது. மக்கள் தரமான கதையை ஒரு பக்கம் வரவேற்றாலும் அதிகமான சத்தம், மாஸ், ஆக்சன், திரில்லர் என்பவைகளுக்கே முன்னுரிமை கொடுத்து வருவதால் படத்தின்  வசூலும் உச்சம் பெறுகிறது. அதே சமயம் கலைஞர்களின் ஊதியமும் உச்சம் தொடுகிறது.

சூர்யா: ஆரம்பத்தில் சற்றே சறுக்கினாலும் இப்போது ஆல் இந்தியாலயும் தலைவர் கெத்து என்பது போல் ஃபான் இந்தியா மூவியாக தேடித்தேடி நடித்து வரும் சூர்யா, சிறுத்தை சிவாவின் கங்குவா திரைப்படத்திற்காக 50 கோடி சம்பளம் பெற்றுள்ளார். அடுத்து தான் நடிக்கும் சரித்திர படத்திற்காக சம்பளம் 80 கோடி நிர்ணயம் செய்துள்ளாராம் சூர்யா.

கமல்: கம்பேக் கொடுத்திருக்கும் கமல், 2022 வெளியான விக்ரம் படத்திற்காக 150 கோடி சம்பளமாக பெற்றிருந்தார். தற்போது பிரபாஸ் மற்றும் கமல் நடிக்கும் கல்கி  திரைப்படத்தின் இரண்டு பாகங்களில் நடிக்க 150 கோடி பெற்று உள்ளார் என்பது தகவல்.

Also read: கமல் நடிக்க ஆசைப்பட்ட 4 படங்கள்.. மணிரத்தினத்தின் மூன்று படங்களை தவற விட்ட ரங்கராய நாயகன்

அஜித்: மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சியில் நடித்து வரும் அஜித்தின் சம்பளம் 150 கோடி, இதனை நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஒரே செக்கில் கொடுத்து விடாமுயற்சியை ஓடிடி உரிமையை வாங்கி உள்ளது. தனது அடுத்த படம்  ஆதிக் ரவிச்சந்திரனின் ஏகே 63 காக அஜித் 200 கோடி சம்பளம் பேசி உள்ளாராம்.

ரஜினி: சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி இருக்கும் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் படத்தில் சம்பளமாக 210 கோடி பெற்ற நிலையில், வேட்டையன் படத்திற்காக 230 கோடி வாங்கி உள்ளார். இதுவே தலைவர் 171 படத்திற்காக லோகேஷ் உடன் கூட்டணி சேரும் ரஜினி 320 கோடி சம்பளம் என டிமாண்ட் வைத்துள்ளதாக தகவல். இது உண்மையாகும் பட்சத்தில் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை ரஜினி தட்டி செல்வார்.

விஜய்: சினிமா, அரசியல் என வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் விஜய் அவர்கள் தற்போது வெங்கட் பிரபுவின் GOAT படத்தில் நடித்து வருகின்றார். இதற்காக அவர் பெற்ற சம்பளமோ 200 கோடி. கமிட்டான ஒன்று இரண்டு படங்களில் நடித்துவிட்டு, தீவிர அரசியலில் இறங்க உள்ள விஜய் அடுத்து கார்த்திக் சுப்புராஜ் உடன் விஜய் 69 காக இணைய உள்ளார் இப்படத்திற்காக இவரை பிக்ஸ் செய்ய சம்பளமாக 250 கோடியுடன் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு சுற்றி வருகின்றன.

Also read: விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பிரச்சனைல மாட்டிவிடும் 5 விஷயங்கள்.. இதுக்கு சரின்னா அடுத்த முதல்வர் விஜய் தான்

Trending News