ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

2023 இன் முன்னணி வரிசையில் இடம் பிடித்த 5 நடிகைகள்.. குந்தவையை போட்டி போட வைத்த நடிகை

டிரெண்டிற்கு ஏற்ப தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த ஹீரோயின்கள் நடிக்க வந்து கொண்டே இருக்கின்றன. அவ்வாறு இருக்க இவர்கள் தன்னை தக்க வைத்துக் கொள்ள பல முயற்சிகளை கையாள வேண்டி இருக்கிறது.

இது போன்ற விட முயற்சியை கைவிடாது தங்களை புதுப்பித்துக் கொள்ளும் ஹீரோயின்களே வெற்றி பெறுகின்றனர். அவ்வாறு தற்பொழுதைய 2023 இன் முன்னணி வரிசையில் இடம் பிடித்த 5 நடிகைகளை பற்றி இங்கு காணலாம்.

Also Read: வசூல் சாதனையில் முதல் 5 இடத்தை பிடித்த படங்கள்.. பல வருட ரெக்கார்டை முறியடித்த மணிரத்தினம்

ப்ரியா பவானி சங்கர்: 2017 மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன்பின் சிம்பு, தனுஷ் போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த இவர் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் வரிக்குதிரை, டிமான்டி காலனி 2, இந்தியன் 2 போன்ற படங்களில் கமிட்டாகி உள்ள ப்ரியா பவானி சங்கர் இந்த வருட டாப் ஹீரோயின் வரிசை பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: தன் விடாமுயற்சியால், மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஃபர்ஹானா, தீராத காதல் போன்ற படங்கள் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்தது. அதைத்தொடர்ந்து துருவ நட்சத்திரம், மோகன்தாஸ் போன்ற படங்களில் கமிட்டாகி உள்ள ஐஸ்வர்யா இந்த வருட ஹீரோயின் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

Also Read: செமையாய் என்ஜாய் பண்ணும் விஜய்.. அந்த 2 பேரால் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் செம ரகளையாம்

கீர்த்தி சுரேஷ்: சமீபகாலமாக மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த படம் தான் சாணி காகிதம். இது இவருக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து தற்போது வெளிவர இருக்கும் மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் பல படங்களில் கமிட்டாகி உள்ள கீர்த்தி சுரேஷ் இந்த வருட ஹீரோயின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

திரிஷா: பல வெற்றி படங்களை கொடுத்த இவர் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக இடம் பெற்று ரசிகர் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்து வருகிறார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று நடிக்கும் வல்லமை கொண்ட இவரை போட்டி போட செய்யும் விதமாக நயன்தாரா இவரை பின்னுக்கு தள்ளி 2023 டாப் ஹீரோயின் பட்டியலில் திரிஷா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

Also Read: செய்தி வாசிப்பாளர் பின் சினிமாவில் கலக்கிய 5 நடிகைகள்.. டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ப்ரியா பவானி

நயன்தாரா: தொடர் வெற்றி கொடுக்கும் ஹீரோயினான நயன்தாரா இன்றும் ரசிகர் நெஞ்சில் குடியிருந்து வருகிறார். இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வம், எண்ணில் அடங்காது என்பதை உணர்த்தும் விதமாக இவர் எடுக்கும் முயற்சி வெற்றி பெறுகிறது. இவரின் படங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர் ரசிகர்கள். இந்த வருடம் 2023 இன் டாப் ஹீரோயின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் நயன்தாரா.

Trending News