Rashmika Mandanna: கவர்ச்சியாக நடித்தும், டாப்ல இருக்கும் 5 நடிகைகள்.. இந்தியளவில் க்ரஷ் ஹீரோயினுக்கு தான் முதலிடம்

rashmika
rashmika

Top 5 actresses who act Glamour: 80ஸ் காலகட்டங்களில் கவர்ச்சிக்கென்றே நடிகைகள் சிலர் வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில், குடும்ப பாங்காக  நடித்துக் கொண்டிருந்த நடிகைகள் சிலர், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல், தாரளமாக கிளாமராக நடிக்க துவங்கினர்.

கவர்ச்சியாக நடித்தும், டாப்ல இருக்கும் 5 நடிகைகள்,

தேவயானி: வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் தடம் பதித்த தேவயானி, தமிழ் திரையுலகில் நடிக்க ஆரம்பித்த காலங்களில், தொட்டா சிணுங்கி, சிவசக்தி என இரு படங்களிலும் படு கிளாமராக நடித்திருந்து பார்ப்பவர்களை வாயடைக்க வைத்திருந்தார்.

மீனா: திரைப்படங்களில் அதிகமாக ஃபேமிலி லுக்கில் காட்சியளிக்கும் மீனா, சுந்தர்சியின் நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில் சக நடிகை மகேஸ்வரியுடன் போட்டி போட்டு, பிரபுதேவா உடன் கிளாமராகவும் கவர்ச்சியாகவும் நடித்திருந்தார்.

அஞ்சலி: சுந்தர் சி இயக்கத்தில் விமல் சிவா அஞ்சலி ஓவியா நடித்த கலகலப்பு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் அஞ்சலி ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடி இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டிருந்தார். 

குடும்ப பங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த அஞ்சலி முன்னணி நடிகருடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பின் இவ்வாறு கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் என தகவல்கள் பரவியது.

வெப் சீரிஸில் நடிக்க உள்ள லட்சுமிமேனன்

லட்சுமிமேனன்: கிராமத்து மற்றும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை அதிகமாக ஏற்று நடித்த லட்சுமிமேனன், தற்போது திரைத்துறையில் வாய்ப்புகள் குறையவே, வெப் சீரிஸில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம். 

ராஷ்மிகா: தென்னிந்திய சினிமாவை தாண்டி  பாலிவுட்டில் தடம் பதித்து கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா, கடந்த ஆண்டு வெளிவந்த அனிமல் படத்தில் பல சர்ச்சைகளான காட்சிகளில் படு கிளாமராக  நடித்ததன் மூலம் தனது மார்க்கெட்டை இரு மடங்கு வேகத்தில் உயர்த்தினார்.

இந்திய நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கும் மற்றும் பிசியான நடிகையாக மாறி உள்ளார் ராஷ்மிகா.

Advertisement Amazon Prime Banner