கோலிவுட் சினிமாவிற்கு இந்த வருடம் அதிர்ஷ்டம் நிறைந்த வருடமாக அமைந்து இருக்கிறது. மற்ற மொழி படங்கள் எல்லாம் ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டு இருக்கும் போது, தமிழ் சினிமா இங்கே கோடிக்கணக்கில் வசூல் செய்து கொண்டு இருக்கிறது. இந்த வருட இறுதியில் ரிலீசான அத்தனை படங்களுமே தமிழ் சினிமாவை உச்சத்திற்கு கொண்டு, கோலிவுட்டில் கலக்சனை 5 படங்கள்:
பொன்னியின் செல்வன்: பொன்னியின் செல்வன் கோலிவுட்டின் இந்த வருடத்திற்கான மைல்கல் என்றே சொல்லலாம். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த படம் ரிலீஸ் ஆனது. பொன்னியின் செல்வன் முன்பதிவுக்கே ஆட்டம் கண்டன தமிழக திரையரங்குகள். படம் வெளியான ஒரு சில வாரங்களிலேயே 182 கோடி வசூல் செய்து விட்டது. மேலும் அதிக வசூலில் சாதனை படைத்த விக்ரம் படத்தின் வசூலை முறியடித்து விட்டது.
Also Read: 4 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா.. பொன்னியின் செல்வன் ஹாட்ரிக் வெற்றி
விக்ரம்: உலக நாயகன் கமலஹாசனுக்கு இந்த ஆண்டை ஒரு வெற்றி கொண்டாட்டமாக மாற்றியது லோகேஷ் கனகராஜின் விக்ரம் திரைப்படம். இந்திய திரையுலகத்தையே தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வாய்த்த விக்ரம் திரைப்படம் 181.5 கோடி வசூல் செய்து இருக்கிறது.
பாகுபலி 2: இந்திய சினிமாவின் மிக பிரமாண்டமாக இன்றளவும் பார்க்கப்படுவது பாகுபலி 1 மற்றும் 2. இதில் பாகுபலி முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது அதற்கு காரணம், கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார் என்ற டிவிஸ்ட் தான். இந்த படம் மொத்தம் 146 கோடி வசூல் செய்தது.
Also Read: கனமான கதாபாத்திரத்துடன் காத்திருக்கும் ராஜமௌலி.. வலையில் சிக்குவாரா அந்த தமிழ் நடிகர்
பிகில்: வழக்கமான விஜயின் மாஸ், பஞ்ச் இல்லாமல் உருவான படம் பிகில். இந்த படத்தில் அட்லீயும், தளபதி விஜயும் மூன்றாவது முறை இணைந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் விளையாட்டு சம்மந்தப்பட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மொத்தம் 145 கோடி வசூல் செய்தது.
மாஸ்டர்: இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் நடிகர் விஜய் இணைந்த முதல் திரைப்படம் மாஸ்டர். கமலஹாசனின் விக்ரம் முதல் பாகத்தின் சாயலாக நடிகர் விஜய் இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்திருப்பார். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மக்கள் தியேட்டர் வர ஆரம்பித்த நேரத்தில் ரிலீசான இந்த படம் 141.5 கோடி வசூல் செய்தது.
Also Read: தளபதியின் 66வது படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுதான்.. பக்கா மாஸ் கேரக்டர்!