ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சமீபத்தில் சின்னத்திரையில் பட்டையை கிளப்பிய 5 பிரபலங்கள்.. மறைந்தாலும் மக்கள் மனதில் வாழும் ஆதி குணசேகரன்

Ethir Neechal-Gunasekran: அதாவது ஒவ்வொரு மாதமும் சின்னத்திரை பிரபலங்களில் மக்கள் மனதில் இடம் பிடித்த முதல் ஐந்து நபர்களை பிரபல நிறுவனம் ஒன்று பட்டியலிட்டு வெளியிடும். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்து சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதன்படி இதில் முதலாவதாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரின் நாயகி சைத்ரா ரெட்டி முதலிடத்தில் இருக்கிறார். இந்த தொடரில் கயல் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். சில வாரங்களாக டிஆர்பியில் முதல் இடத்தை இந்த தொடர் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : காணாமல் போகும் ஆதி குணசேகரன்.. மாரிமுத்து இல்லாததால் தத்தளிக்கும் எதிர்நீச்சல் ஜீவானந்தம்

அடுத்ததாக இரண்டாவது இடத்தில் பாக்கியலட்சுமி தொடரில் ஆணிவேராக இருக்கும் பாக்யா தான் இருக்கிறார். பல சிக்கலில் இருந்து மீண்டு எவ்வாறு பெண்கள் தைரியத்துடன் செயல்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கு ஏற்றார் போல் பாக்யா கதாபாத்திரமும் தொடர்ந்து மெருகேற்றி வருகிறது.

அடுத்ததாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு தொடரான சுந்தரி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வரும் கேப்ரில்லா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். பாக்கியலட்சுமி தொடரை போல இந்த தொடரும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொடராக தான் சென்று கொண்டிருக்கிறது.

Also Read : மொத்த குடும்பத்திடமும் அசிங்கப்பட போகும் கோபி.. தலை தப்பிய பாக்யா

நான்காவது இடத்தை எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்து பெற்றிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது இழப்பு சின்னத்திரைக்குப் பேரிழப்பாக மாறி இருந்தது. மறைந்தாலும் இப்போதும் மக்கள் மனதில் ஆதி குணசேகரனாக மாரிமுத்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

ஐந்தாவது இடத்தை இனியா தொடரில் நடித்து வரும் ஆலியா மானசா பெற்றிருக்கிறார். அவருடைய துணிச்சலான நடிப்பு இத்தொடருக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. இவ்வாறு சன் டிவி நட்சத்திரங்கள் நான்கு இடத்தை தக்க வைத்துள்ளனர். வரும் வாரங்களில் இது எவ்வாறு மாற இருக்கிறது என்று தெரியவரும்.

Also Read : கடைசி காட்சியில் மிரட்டி விட்ட குணசேகரன்.. அடுத்தடுத்து தொழிலதிபராக மாறும் மருமகள்கள்

Trending News