புதன்கிழமை, ஜனவரி 8, 2025

சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த டாப் 5 பிரபலங்கள்.. நான்கு பெண்கள் மத்தியில் ஒரு ஆணழகன்

Favorite Top 5 Serial Artist: திறமை எங்க இருந்தாலும் வரவேற்கப்படும் என்பதற்கு ஏற்ப வெள்ளித்திரை பிரபலங்களுக்கு இணையாக சின்னத்திரையில் நடித்து வரும் சீரியல் ஆர்ட்டிஸ்ட்களும் மக்கள் மனதில் இடத்தை பிடித்து விட்டார்கள். அந்த வகையில் ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை ஒரு நாள் கூட மிஸ் பண்ணாமல் பார்த்து வரும் குடும்பங்கள் எக்கச்சக்கமாக இருக்கிறது.

சில குடும்பங்கள் சீரியலை பார்த்தால் தான் தூக்கமே வரும் என்பதற்கு ஏற்ப அடிட் ஆகிவிட்டார்கள். சில சந்தர்ப்பங்களால் அவர்களால் பார்க்க முடியாமல் போனால் கூட அதற்கேற்ற ஆப் மூலம் பார்த்து விடுகிறார்கள். அந்த அளவிற்கு சீரியல்கள் மக்கள் மனதில் சிம்ம சொப்பனமாக இடம் பிடித்திருக்கிறது. அப்படிப்பட்ட சீரியல்களில் நடித்த சில பிரபலங்களுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அந்த வகையில் சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரபலங்களை பற்றி பார்க்கலாம். இதில் முதலிடத்தில் இருப்பது சைத்ரா ரெட்டி.  தெலுங்கு சீரியலில் அறிமுகமாகிய பின் தமிழில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்த போது ரசிகர்களை கொஞ்சம் கொஞ்சமாக கவர்ந்தார். அதன் பின் சன் டிவியில் முன்னணி கதாபாத்திரத்தில் கயல் என்ற நாடகத்தின் மூலம் அனைவரையும் கட்டி போட்டு விட்டார். தற்போது இவருக்காகவே இந்த நாடகத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற நிலைமைக்கு ரசிகர்கள் குவிந்து விட்டார்கள்.

Also read: பாக்யாவைப் பார்த்து வாய் அடைத்துப் போய் நிற்கும் கோபி அங்கிள்.. சைக்கோ டார்ச்சருக்கு முடிவு கட்டும் மருமகள்

அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருப்பவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி. குடும்ப இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த சுசித்ரா ஷெட்டி. படிப்பு அறிவு இல்லாவிட்டாலும் குடும்பத்தை தன் சொந்த காலில் நின்னு கரையேற்ற முடியும் என்ற உதாரணத்திற்கு துணிச்சலாக போராடி வருகிறார். இவருக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் இருப்பது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரின் நாயகன் கார்த்திக்.

இவருக்கு ஆரம்பத்தில் விஜய் டிவி மூலம் பிளாட்பார்ம் கிடைத்திருந்தாலும் கேரியரில் நல்ல மார்க்கெட்டை வாங்கி கொடுத்தது செம்பருத்தி நாடகம் மூலம். அதன் பின் கார்த்திகை தீபம் நாடகத்தில் மறுபடியும் ஆணழகனாக உள்ளே நுழைந்து ரசிகர்களை கவர்ந்து விட்டார். அடுத்ததாக நான்காவது இடத்தில் இருப்பது ஆலியா மானசா. இவரும் விஜய் டிவி மூலம் தான் அறிமுகமானார். அதன் பின் சன் டிவியில் இனியா நாடகத்தில் நடித்ததன் மூலம் இவருக்கான மார்க்கெட்டை உயர்ந்து விட்டது.

அடுத்ததாக ஐந்தாவது இடத்தில் இருப்பது ஆணாதிக்கத்திற்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக குணசேகரனை எதிர்த்துப் போராடும் துணிச்சலுடன் வரும் ஜனனி. இவருடைய உண்மையான பெயர் மதுமிதா, இவர் கன்னடத்தில் நான்கு வருடங்களாக இவருடைய நடிப்பை கொடுத்து சீரியல் நடிகையாக வலம் வந்தவர். தமிழில் முதன்முதலாக எதிர்நீச்சல் மூலம் வாய்ப்பு கிடைத்தது. அப்படிப்பட்ட இவர் தற்போது ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் வகையில் இடம் பிடித்திருக்கிறார்.

Also read: 1000 எபிசோடை கடந்த டாப் சீரியல்.. நாலு வருஷமா உருட்டப்படும் சக்காளத்தி சண்டை

Trending News