என்னதான் படத்தின் கதை பெரிதளவு பேசப்பட்டாலும் அதனின் வசூலை கொண்டே வெற்றி பெற்றதாக கருதப்படுகிறது. அவ்வாறு தான் இயக்கிய படங்கள் மாபெரும் வெற்றியை பெறுவதற்கு தன் முழு முயற்சியை கொடுப்பவர்கள் இயக்குனர்கள்.
இத்தகைய முயற்சிகளைப் போட்டும் திரையரங்கில் படங்களை பார்க்காமல் ஓ டி டிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இத்தகைய பிரச்சினையை எதிர்கொண்டு வசூல் சாதனையில் முதல் 5 இடத்தை பிடிக்க படங்களை பற்றி இங்கு காணலாம்.
Also Read: செமையாய் என்ஜாய் பண்ணும் விஜய்.. அந்த 2 பேரால் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் செம ரகளையாம்
எந்திரன் 2.o: 2018ல் பிரம்மாண்டமாய் மாபெரும் தொழில்நுட்பங்களைக் கொண்டு சங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் எந்திரன் 2.o. சுபாஸ்கரன் தயாரிப்பில் வெளிவந்த இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலாக சுமார் 220 கோடி பெற்று 5ஆம் இடத்தில் உள்ளது.
பிகில்: 2019ல் பெண்களின் விளையாட்டு சம்பந்தமான கதை கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் பிகில். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்தின் பட்ஜெட் ஆக பார்க்கையில் 180 கோடி செலவிடப்பட்டது. மேலும் அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூலாக பார்க்கையில் சுமார் 280 கோடியை பெற்ற நான்காவது இடத்தில் உள்ளது.
வாரிசு: அண்மையில் வெளிவந்த இப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் மற்றும் பி வி பி சினிமா தயாரிப்பில் வெளிவந்த இப்படத்தின் பட்ஜெட் ஆக பார்க்கையில் சுமார் 200 கோடி செலவிடப்பட்டது. மேலும் இதன் பாக்ஸ் ஆபிஸ் வசூலாக பார்க்கையில் சுமார் 300 கோடி வசூலை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
விக்ரம்: 2022 ல் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த படம் தான் விக்ரம். பிரம்மாண்டமாக கமல் நடிப்பில் எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று சுமார் 426 கோடி வசூலை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
Also Read: உயிரை விட துணிந்த சிம்பு பட நடிகை.. ராகுல் காந்தியால் அரசியலில் ஜொலிக்கும் ஹீரோயின்
பொன்னியின் செல்வன்: மணிரத்தினம் மற்றும் லைகா புரொடக்ஷனில் வெளிவந்த படம் தான் பொன்னின் செல்வன். வரலாற்று கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமில்லை. இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று சுமார் 480 கோடி வசூலை பெற்றது. அதன்பின் இதனின் பாகம் 2 வெளியாகி சுமார் 325 கோடி வசூலை பெற்றது. சுமார் 15 வருட ரெக்கார்டை முறியடிக்கும் விதமாக இப்படம் வசூலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இத்தகைய பெருமை இப்படத்தின் இயக்குனரான மணிரத்தினத்தையே சேரும்.