தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருக்கும் நடிகர்கள் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனத்தை செலுத்தாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளான டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளனர்.தற்பொழுது பிரபல நடிகர்கள் தொகுத்து வழங்கிய டிவி நிகழ்ச்சிகள் அதிலும் கமலஹாசன் தொடர்ந்து ஆறாவது முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
கமலஹாசன் : பிக் பாஸ் நெதர்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சி தற்பொழுது தமிழில் 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற மறு உருவாக்கத்தில் ஒலிபரப்பப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் உண்மை நிலையை தினம் தோறும் நடப்பதை தொகுத்து வழங்குவதாகும்.இந்நிகழ்ச்சியினை பல சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படங்களில் நடித்த உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.10 பேர் கொண்ட நபர்களைக் கொண்டு 100 நாட்கள் ஒரு வீட்டிற்குள் இருந்து அந்த வீட்டிற்குள் நடக்கும் உண்மை சம்பவங்கள் அனைத்தையும் வெளி உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக இந்நிகழ்ச்சியானது அமைந்துள்ளது.தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியானது ஐந்து சீசனை கடந்துள்ள நிலையில் ஆறாவது சீசனை வெற்றிகரமாக தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார் . ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பாப்புலராக இருக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸும் உள்ளது .
சூர்யா : ஹிந்தியில் நடிகர் அமிதாப்பச்சன் நடத்தும் உங்களில் யார் கோடீஸ்வரன் எனப்படும் கே பி எஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம்.இதனைத் தொடர்ந்து தமிழில் கோடீஸ்வரன் என்ற பெயரில் நிகழ்ச்சியை நடிகர் சூர்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் தொகுத்து வழங்கி உள்ளனர்.இதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்படும் . இந்நிகழ்ச்சியில் சரியான பதில் அளிக்கும் ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையானது வழங்கப்படும்.
ஆர்யா : கலர்ஸ் தமிழில் “எங்கள் வீட்டு மாப்பிள்ளை” என்னும் நிகழ்ச்சி ஆர்யாவின் திருமணத்திற்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது.டாப் நடிகர்களுள் ஒருவராக இருக்கும் ஆர்யா இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் 16 பெண்களின் தனக்கு ஏற்ற வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்ளும் முயற்சியில் இந்நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது. எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை நடிகை சங்கீதா கிரேஷ் தொகுத்து வழங்கினார். ஆனால் இந்நிகழ்ச்சியின் வெற்றியாளரை ஆர்யா திருமணம் செய்து கொள்ளவில்லை மாறாக நடிகை சாய்ஷாவை திருமணம் செய்து கொண்டார்.
விஜய் சேதுபதி : மாஸ்டர் செஃப் சன் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சமையல் போட்டி நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியை பிரபல திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.மாஸ்டர் செஃப் சமையல் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியுடன் சமையல் கலை நிறுவனர் ஹரிஷ் ராம், ஆர்த்தி சம்பத் மற்றும் கௌஷிக் ஆகியோர் நீதிபதிகளாக இருந்து தீர்ப்பினை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக 14 பேர் கலந்து கொண்டு சமையல் கலை நிறுவனர்கள் மூலம் தேர்ச்சி பெற்று அதில் வெற்றியாளருக்கு மாஸ்டர் செஃப் பட்டத்தையும் 25 லட்சம் ரொக்க பணத்தையும் பரிசாக அளித்தனர் .
சரத்குமார் : வெல்கம் டு கோடீஸ்வரன் சரத்குமாரின் இந்த குரல் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் நிலைத்திருக்கிறது.பிரம்மாண்டமான செட் அமைத்து அசத்தலான கோட் சூட்டுகளுடன் வந்த சரத்குமாரின் கோடீஸ்வரன் நிகழ்ச்சி ஆனது துவக்கத்தில் அவ்வளவு பெயர் இல்லாவிட்டாலும் கூட போகப் போக மக்களிடையே பாப்புலர் ஆனது . வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மட்டும் சரத்குமாரின் கோடீஸ்வரன் நிகழ்ச்சி ஆனது ஒளிபரப்பாகும்.ஆனால் இதுவரை யாருமே அந்த நிகழ்ச்சியின் மூலம் கோடீஸ்வரனாகவில்லை.அதற்குள் அந்த நிகழ்ச்சிக்கு சோதனை வந்துவிட்டது சுவாரசியமான சோகம் தான் .
அர்ஜுன் : சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான “சர்வைவர்” என்ற பிரமாண்டமான நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது . இது விஜய் டிவியில் ஒளிபரப்பு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக வந்த நிகழ்ச்சி என்ற தகவல் வெளியானது . இதில் யாருமில்லாத தனித்தீவுகளில் போட்டியாளர்கள் நூறு நாட்கள் வரை தாக்க பிடித்து எழும்பினேட் ஆகாமல் கடைசி வரை இருக்க வேண்டும் என்பதை போட்டியின் நிபந்தனையாகும் . அப்படி கடைசிவரை எலிமினேட் ஆகாமல் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுபவர்களுக்கு ஒரு கோடி பரிசு தொகையாக வழங்கப்படும் . இந்த நிகழ்ச்சிக்கு உடல் மற்றும் மனதிடத்துடன் இருக்கும் தொகுப்பாளரை தேவை என தீவிர தேர்தலுக்கு பிறகு அர்ஜுனை இந்த போட்டியின் தொகுப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .