சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

2023 அதிக வசூலை ஈட்டிய டாப் 5 படங்கள்.. பாக்ஸ் ஆபிஸை மிரட்டி விட்ட ஷாருக்கான்

Top 5 movies in 2023: இந்த மாதத்துடன் 2023 ஆம் ஆண்டு நிறைவடைந்து அடுத்த மாதம் புத்தாண்டு துவங்கப் போகிறது. இதனால் இந்த வருடத்தில் அதிக வசூலை பெற்று தந்த ஐந்து படங்கள் எவை என்பது வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. இதில் இந்த வருடம் ஷாருக்கான் நடித்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸை மிரட்டி விட்டுள்ளது.

லியோ: லோகேஷ் தனகராஜ் இயக்கத்தில் எல்சியு மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான தளபதி விஜய்யின் லியோ படம் இந்த வருடம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி திரையரங்கை ஆர்ப்பரிக்க வைத்தது. தமிழகத்தில் மட்டுமல்ல உலக அளவில் விஜய்யின் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர். இருப்பினும் இதன் செகண்ட் ஆப் எதிர்பார்த்த அளவு இல்லாமல் போனாலும் தளபதியின் லியோ படம் ஒட்டுமொத்தமாக 620 கோடியை பாக்ஸ் ஆபீஸில் நிரப்பியது. இதனால் 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூலை ஈட்டிய டாப் 5 லிஸ்டில் லியோவிற்கு 5-வது இடம் கிடைத்திருக்கிறது.

ஜெயிலர்: 72 வயதிலும் கோலிவுட்டில் நான் தான் சூப்பர் ஸ்டார் என்பதை ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினி மறுபடியும் நிரூபித்து காட்டிவிட்டார். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த படம் உலகம் முழுவதும் 650 கோடி வசூலை பாக்ஸ் ஆபிஸில் குவித்து, இந்த வருடம் அதிக வசூலை ஈட்டிய படங்களின் லிஸ்டில் 4வது இடத்தை பிடித்துள்ளது.

Also Read: சத்தம் இல்லாமல் 10 நாளில் அனிமல் படம் செய்த வசூல் சாதனை.. ஓவர் அலப்பறை காட்டிய லியோ, ஜெயிலர்

2023 ஆம் ஆண்டு அதிகம் வசூலித்த 5 படங்கள்

அனிமல்: என்னதான் அனிமல் படம் மிகவும் வன்முறையான ரத்தக்களரியாக இருந்தாலும், இதில் தந்தையை கொலை செய்ய முயற்சிப்பவரை மிருகம் போல் எதிர்கொள்ளும் மகனின் போராட்டம் தான் இந்த படத்தின் கதை. இதில் ரன்பீர் கபூர், அனில் கபூர் முக்கிய கேரக்டரில் நடித்து அசத்தினர். அனிமல் திரைப்படம் வெளியாகி வெறும் பத்தே நாளில் 700 கோடியை உலகம் முழுவதும் வசூலித்து, அதிக வசூலை ஈட்டிய படங்களில் 3வது இடத்தில் இருக்கிறது.

பதான்: பாலிவுட் திரை உலகமே பாய் காட் பிரச்சனையில் சிக்கி தவித்த போது ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி, சூப்பர் ஹிட் அடித்த படமான பதான் திரைப்படம் தான் ஹிந்தி பிரபலங்களுக்கு எல்லாம் ஒரு பெரிய நம்பிக்கையை அளித்தது. இந்த படத்திற்கு உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பதான் படம் உலக அளவில் 1050 கோடியை வசூலித்து, இந்த வருடம் அதிக வசூல் ஆன படங்களில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

ஜவான்: அட்லி பாலிவுட்டிற்கு இயக்குனராக அறிமுகமான ஜவான் படத்தில் ஷாருக்கான், நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இந்த படம் தான் நயன்தாராவிற்கும் முதல் ஹிந்தி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜவான் படமானது பாக்ஸ் ஆபிஸில் ஒட்டுமொத்தமாக 1160 கோடியை வசூலித்து மிரட்டி விட்டதால் 2023 அதிக வசூலை ஈட்டிய படங்களில் முதல் இடத்தில் உள்ளது.

Also Read: காமெடி நடிகரிடம் அப்பட்டமாக தோற்றுப் போன நயன்தாரா.. பிரமோஷன் செஞ்சும் திருப்பி செய்த கர்மா

Trending News