புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஆன்ட்டிஸ் ஆனாலும் அக்காவா நடிக்க தயங்கும் 5 டாப் ஹீரோயின்கள்.. கல்யாணம் ஆகாமலே நயனுக்கு டஃப் கொடுக்கும் நடிகை

Top 5 most beautiful actresses in their 40s: சினிமாவில் நடிப்பு திறமையுடன் வசீகர தோற்றத்தாலேயே ரசிகர்களை கட்டி போடுகின்றனர் நடிகைகள். திருமணத்திற்கு பின் நடிகைகள் வந்த இடம் தெரியாமல் காணாமல் போவது என்ற எழுதப்படாத விதி நிலவி வந்த நிலையில் திருமணம் ஆகியும் 40 வயதை நெருங்கினாலும் கூட நடிகைகள் அதே இளமையுடன் தனது இடத்தை விட்டுக் கொடுக்காமல் உடும்புப்பிடியாக சாதித்து  வருகின்றனர் அதில் சிலர்,

சமந்தா: பீனிக்ஸ் பறவை போல் பல்வேறு சோகங்கள் சர்ச்சைகளைக் கடந்து  துளித்து வரும்  37 வயது நடிகை சமந்தா என்றும் இளமை மாறாமல் முதலிடத்தை பிடித்து முன்னணி நாயகி ஆக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். மறுமணம் பற்றிய கேள்விக்கு மறுமணம் தவறான முடிவு என புள்ளி விவரங்களுடன் அடுக்கி விடுகிறார் சமந்தா.

நயன்தாரா: இரண்டாவது இடத்தை பிடித்த இந்த தமிழ்நாட்டு மருமகள் 40 வயது ஆனாலும் இன்றும் இளமை குறையாது இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டை கலக்கிய இந்த லேடி சூப்பர் ஸ்டார் திருமணத்திற்கு பின்பும்  தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.தற்போது எல்ஐசி யில் பிரதீப்பின் அக்காவாக நடிக்க உள்ளார் நயன்தாரா.

Also read: ரசகுல்லா நடிகையுடன் உறுதியான நிச்சயதார்த்தம்.. வெளிச்சத்திற்கு வந்த விஜய் தேவரகொண்டாவின் மன்மத லீலை

காஜல் அகர்வால்: மும்பை இறக்குமதியான காஜல் அகர்வால் தமிழில் விஜய் உடன் துப்பாக்கி ஜெயம் ரவியுடன் கோமாளி என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து புகழ்பெற்றவர். 40 வயது நெருங்கும் காஜல் அகர்வால் பிரபல தொழில் அதிபரை 2020இல் திருமணம் செய்து கொண்டார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ரஷ்மிகா மந்தனா: த்ரிஷாக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தை பிடித்த ரஷ்மிகா மந்தனா தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு தற்போது அனிமல் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். தெலுங்கின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் நிச்சயதார்த்தம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

திரிஷா கிருஷ்ணன்:  ஐந்தாவது இடமாக 2000 ஆண்டியின் மிஸ் சென்னை ஆன திரிஷா அவர்கள் அமீரின் மௌனம் பேசியதே மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகையாக இளமை குறையாமல் வலம் வரும் இந்த மிஸ் மிஸ்ஸஸ் ஆகாமல் மிஸ்ஆகிக் கொண்டே வருகிறார்.வயதானாலும் திரிஷா மற்றும் நயன்தாராவிற்கு இடையே இருக்கும் போட்டி குறைவதில்லை. ஒருவர் மாற்றி ஒருவர் முன்னணி நடிகர்களின்  படங்களை பிடித்து விடுகின்றனர்.

Also read: தடையாக இருந்த திருமணத்திற்கு குட்பை.. சமந்தா, அமலாபால் வரிசையில் விவாகரத்துக்கு தயாரான ஹீரோயின்

Trending News